×
 

எதையுமே என்னால சொல்ல முடியாது..! பேச மறுக்கும் வைகோ.. உட்கட்சி பூசலால் குழப்பமா?

துரை வைகோ விவகாரத்தில் நிர்வாகக் குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

துரை வைகோ விவகாரத்தில் நிர்வாகக் குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அடுத்து தாங்கள் நடத்த வேண்டிய போராட்டங்கள், மாநாடுகள், பொதுக்குழு கூட்டங்கள் இதைப்பற்றி விவாதிப்பதற்காக நாளை நிர்வாக குழு கூடுகிறது என்றும் அதற்கான முடிவுகள் எடுக்கும் நேரத்தில் இந்த பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது எனவும் கூறினார்.

துரை வைகோ விலகல் குறித்தும் நிர்வாகக் குழுவில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை கூறுவார்கள், அதன் பிறகு, நிர்வாக குழுவின் தலைமை நிர்வாகம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இப்போது துரை வைகோ ராஜினாமா விவகாரத்தில் எந்த கருத்தும் கூற இயலாது என வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ..! விலகலை ஏற்க மறுக்கும் மதிமுக..!

இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பை உதறிய துரை வைகோ..! தந்தை வைகோவுடன் முக்கிய ஆலோசனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share