×
 

ஆல் ரைட்..! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் AIIM-ல் இருந்து டிஸ்சார்ஜ்..!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், இதயம் தொடர்பான பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது பூரண குணமடைந்து, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திலிருந்து (AIIMS) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று மருத்துவமனை அறிவித்தது. அவர் மார்ச் 9ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

AIIMS-தில்லியின் அறிக்கையின்படி, துணை ஜனாதிபதி மருத்துவக் குழுவிடமிருந்து முழுமையான சிகிச்சை பெற்று, கடந்த சில நாட்களாக நிலையான முன்னேற்றம் அடைந்தார். “தேவையான சிகிச்சைக்குப் பிறகு, அவர் திருப்திகரமாக குணமடைந்து, மார்ச் 12 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை முன்னேற்றத்தில் நம்பிக்கை தெரிவித்த மருத்துவமனை, அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் அஸ்திவாரமே சனாதன தர்மம் தான்.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அதிரடி..!

குடியரசு துணைத் தலைவர் தன்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் குடியரசுத் துணை தலைவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளும்  துணை ஜனாதிபதி, மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி, படிப்படியாக பணிகளை மீண்டும் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியின் மிகப்பெரிய மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனை தனக்கு அற்புதமான சிகிச்சை வழங்கியதாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: இந்தியாவின் அஸ்திவாரமே சனாதன தர்மம் தான்.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அதிரடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share