×
 

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் சதி.. காஷ்மீரில் கணவனை இழந்த பெண் கண்ணீர்..!

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் முழுக்க முழுக்க பாகிஸ்தானின் சதி தான் என தாக்குதலில் கணவனை இழந்த குஜராத் பெண் கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 22ம் தேதி பயங்கராவதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், சுற்றுலா பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். குடும்பத்தோடு சுற்றுலா சென்றவர்களில் இந்துக்கள் மீது மட்டும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்துக்கள், முஸ்லிம்களை தனித்தனியாக நிறுத்தி வைத்து, அவர்களை தொழுகைக்கான நமாஸ் ஓத வைத்து, உண்மையில் அவர் முஸ்லிம் தானா என்பதை உறுதி செய்தனர். பின் முஸ்லிம் அல்லாத ஆண்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இதில், குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த சைலேஷ் கலாத்தி என்பவர் அவரது மனைவி, குழந்தைகளின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியது குறித்தும், அவர்கள் நடத்திய கொடூர தாக்குதல் குறித்தும் சைலேஷின் மனைவி, மகன் விளக்கினர். இது குறித்து, சைலேஷின் மனைவி கூறியதாவது: நாங்கள் மும்பையில் இருந்து 18ம் தேதி ஜம்மு சென்றோம். அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்த்த பின், 22ம் தேதி அங்கிருந்து பஹல்காம் சென்றோம்.

நாங்கள் சுற்றுலா தலத்திற்குள் சென்ற 5 நிமிடத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து தப்ப நினைத்தோம். பயங்கரவாதிகள் அங்கிருந்த அனைவரையும் சுற்றி வளைத்தனர்.இந்துக்கள், முஸ்லிம்களை தனித்தனியாக நிற்க வைத்தனர். பின் இந்து மதத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.எனதருகில் வந்த பயங்கரவாதி, பச்சை நிற குர்தாவும், நமாஸ் படிக்கும் போது அணியும் குல்லாவும் அணிந்திருந்தான். கையில் வைத்திருந்த மிக நீளமான துப்பாக்கியால் மிக எளிதாக அனைவரையும் சுட்டுத் தள்ளினான்.

இதையும் படிங்க: பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..!

அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதிருந்த போதும் பயங்கரவாதிகள் மீதான பயத்தால் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்தபடி நடுங்கிய படி இருந்தோம். இந்து முஸ்லிம்களை பிரிந்து நிற்கும் படி கூறியதை தவிர பயங்கரவாதி வேறெதும் பேசவில்லை. அங்கிருந்த அனைரும் தங்கள் குழந்தைகளுடன் இருந்ததால் யாருக்கும் வாய் திறந்து பேசவும் தைரியம் வரவில்லை. அவர்கள் எப்படியாவது இங்கிருந்து சென்று விட்டால் உயிர் தப்புவோம் என்பது மட்டுமே எங்கள் மனதில் ஓடியது. பயங்கரவாதிகள் எங்களை விட்டு விட்டு சென்றால் பின் அரசிடம் ஏதாவது உதவி கேட்டு அங்கிருந்து தப்பித்துவிடலாம் என எண்ணினோம்.

ஆனால், அதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் அவர்கள் வழங்கவில்லை அங்கிருந்த இந்துக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். தங்கள் உறவினர்கள் கண் முன்னே அனைவரும் துடிதுடித்து இறந்தனர். என் கணவரின் உடல் என் மடியில் சாய்ந்தது. எனக்கு பின்னால் என் மகளும், அவளுக்கு பின்னால் என் மகனும் அமர்ந்திருந்தனர்.  சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களின் கண் முன்னே நடந்த கொடுமையை நினைத்து அழுது புலம்பினர். நாங்களும் செய்வதறியாது மிகுந்த துயரத்தை அனுபவித்தோம்.

 பயங்கரவாதிகள் கூறியது போல், அங்கு இந்து - முஸ்லிம் என்ற  பாகுபாட்டுடன் யாரும் பழகவில்லை. அங்கிருந்த பெரும்பாலானோர் முஸ்லிம்களே. சுற்றுலா பயணிகள் அனைவிரிடமும் அவர்கள் இனிமையாக பழகினர். இந்த தாக்குதல் முற்றிலும் பாகிஸ்தானின் சதியே. சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் பாதுகாப்பில்லாத இடங்களை அரசு உடனே மூட வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இதையும் படிங்க: அடிச்சி நொறுக்குங்க.. சொன்ன மாதிரியே செய்த மோடி.. தவிடுபொடியாகும் பாகிஸ்தான்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share