முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!
இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் திமுக தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி இல்லை- விஜய் திட்டவட்டம்..! திமுக vs தவெக-வாக மாறும் அரசியல் களம்..!
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி, ராகுல் காந்தி எம். பி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தின் சுயாட்சி வேண்டும், ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும், இருமொழிக் கொள்கையை கொண்டு வர வேண்டும் அதுதான் என் பிறந்த நாளுக்கான வாழ்த்துச் செய்தி எனக்கு தெரிவித்துள்ளார்.
வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை எனக் கூறிய முதலமைச்சர்,என்னுடைய கவலை எல்லாம் நாட்டைப்பற்றி, மாநிலத்தை பற்றி, மாநிலத்திற்கான உரிமையை பெறுவது பற்றித்தான் என கூறினார்.
இதையும் படிங்க: சொந்த கட்சிக்கே கைகொடுக்காத பி.கே.வியூகம்: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகுமா..?- தொடரும் சறுக்கல்கள்..!