மார்ச்.14க்கு அப்புறம் விஜய்யை நெருங்கவே முடியாது… ஏன் தெரியுமா?
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய்க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.
கட்சி ஆரம்பித்த பிறகு பரந்தூருக்கு சென்றதைத் தவிர விஜய் பெரிய அளவில் வேறு எதும் செய்யாததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். இது பேசுபொருளாக மாறியது. இதனிடையே தற்போது தமிழக வெற்றிக் கழக பொதுக் குழுக் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்த நிலையில், அடுத்து மீனவர்கள் பிரச்சினை, மேட்டூர் அனல் மின்நிலைய தொழிலாளர்களை விஜய் சந்திப்பது என அடுத்த நடவடிக்கைகளை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாங்க உங்களுக்கு ஹெட் மாஸ்டர் டா..! நாதக vs தவெக… வைரலாகும் போட்டோஸ்..!
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பிப்ரவதி மாதத்தில் வெளியாகி இருந்தது. இதன் மூலம் 8 முதல் 11 சிஆர்பிஎஃப் காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர். ஒரே நேரத்தில் இல்லாமல் சுழற்சி முறையில் விஜய்க்கு இவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு விஜய் தரப்பில் பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிடம் கடிதம் அளிக்கப்பட்டதாகவும், அது பரிசீலனையில் இருந்த நிலையில் உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் வீரர்களின் மூன்று பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மெஷின் கண்ணுடன் விஜயின் வீட்டில் பாதுகாப்பில் இருப்பர். மற்ற எட்டு பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். 9 எம்எம் பிஸ்டல், ஸ்டன் கன்னுடன் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இதை அடுத்து மார்ச் 14ஆம் தேதி முதல் அவருக்கு 11 மத்திய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக அரசின் செயலால் விரக்தி அடைந்த திருமாவளவன்... சற்றுமுன் தவெக செய்த தரமான சம்பவம்...!