×
 

வேலூர் கிராமத்தில் வெடிக்கும் வக்பு சொத்து சர்ச்சை.. கொதிக்கும் மக்கள்.. விசாரிக்கும் அரசு.. பாஜகவின் வார்னிங்!

வேலூர் மாவட்டம் ​காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 150 குடும்​பங்​களுக்கு வக்பு வாரி​யம் வரி கேட்டு நோட்​டீஸ் அனுப்​பிய விவ​காரம் சர்ச்சையாகி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் ​காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 150 குடும்​பங்​களுக்கு வக்பு வாரி​யம் வரி கேட்டு நோட்​டீஸ் அனுப்​பிய விவ​காரம் சர்ச்சையாகி இருக்கிறது.

வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு ஒன்​றி​யத்தில் இறைவன்​காடு ஊராட்சிக்கு உட்​பட்ட காட்​டுக்​கொல்லை என்கிற கிராமத்​தில் 500 குடும்​பத்​தினர் வசித்து வரு​கின்​றனர். இதில் 150 குடும்​பத்​தினர் வசிக்​கும் வீடு​கள் வக்பு வாரி​யத்​துக்கு சொந்​த​மானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரி​யம் நோட்​டீஸ் அனுப்​பிய​து. இந்த விவகாரம் தற்போது சர்ச்சை ஆகியிருக்கிறது.



இந்த விவகாரம் தொடர்​பாக அப்​பகு​தி​யைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்​சி​த் தலைவர் அலு​வல​கத்​தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “இங்கு 4 தலை​முறை​களாக வசித்து வரு​கிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தி வரு​கிறோம். தற்​போது இந்த இடம் வக்பு சொத்து என்​றும், அதற்குரிய வரி கட்​டா​விட்​டால் வீடு​கள் அகற்​றப்​படும் என்​றும் நோட்​டீஸ் கொடுத்​துள்​ளார்​கள்” என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தெரிய வந்ததும், இந்து முன்​னனியும் களத்தில் இறங்கியது. இந்து முன்னணி சார்​பில் மாவட்ட ஆட்​சி​த் தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அதில், "கீழண்டையில் உள்ள நவாப் மசூதி மற்​றும் ஹசரத் சையத் அலி சுல்​தான் ஷா தர்கா சார்​பில் வக்பு போர்​டுக்கு வரி கேட்டு நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே, அந்​தக் குடும்​பங்​களுக்கே உடனே பட்டா வழங்க வேண்​டும்" என்று மனுவில் தெரி​விக்கப்பட்டுள்ளது.



இந்த விவகாரம் தொடர்பாக தர்​கா​வின் முத்​தவல்லி சையத் சதாம் தரப்​பினர் விளக்கம் அளித்துள்ளனர். “காட்​டுக்​கொல்​லை​யில் 5 ஏக்​கருக்கு மேல் வக்​புக்கு சொந்​த​மான நிலம் உள்​ளது. 1954ஆம் ஆண்டிலிருந்தே அதற்​கான ஆவணங்​கள் உள்​ளன. வக்பு இடத்​தில் உள்​ளவர்​களை முறைப்​படுத்​தவே நாங்கள் நோட்​டீஸ் கொடுத்​துள்​ளோம். அந்த இடத்தை காலி செய்​ய​வோ, இடிப்​போம் என்றோ நாங்கள் சொல்​ல​வில்​லை” என்​று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்​து வேலூர் மாவட்ட ஆட்​சித் தலைவர் வி.ஆர்​.சுப்​புலட்​சுமி உத்​தர​வின்​பேரில், வரு​வாய் கோட்​டாட்​சி​யர் தலை​மை​யில், வட்​டாட்​சி​யர், கிராம நிர்​வாக அலு​வலர் கொண்ட குழு அமைக்​கப்​பட்​டு, விசா​ரணை நடத்​தப்​பட்டு​ வருகிறது. பொது​மக்​களும் தர்கா தரப்பினர் அளிக்​கும் ஆவணங்​களைப் பரிசீலித்த பின்​னரே, உரிய முடி​வெடுக்​கப்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதையும் படிங்க: இது வக்ஃபு வாரிய சொத்து... ஊரை காலி செய்யுங்கள்: தமிழக கிராமத்துக்கு வந்த நோட்டீஸால் பரபரப்பு..!



இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"காட்​டுக்​கொல்​லை​யில் நடந்த நிகழ்​வு, வக்பு சட்​டத் திருத்​தத்​தின் முக்​கி​யத்​து​வத்தை உணர்த்​தி​யுள்​ளது. பல தலை​முறை​களாக வசித்​து​வரும் குடும்​பங்​களை சட்ட விரோத​மாக அகற்ற முற்​படு​வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். அந்த மக்​களுக்கு நீதி கிடைக்​கவில்லை என்​றால், அங்குசென்று போ​ராட்​டத்​தை முன்னெடுப்​போம்​” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “டெல்லிக்கே ராஜான்னாலும், தமிழ்நாட்டுக்கு பிச்சைக்காரன் தான்”... பாஜகவை வறுத்தெடுத்த திமுக அமைச்சர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share