×
 

இந்தி திணிப்பின் முதல் போராளி பெரியார்..? வரலாறே தெரியாமல் உதயநிதியின் உருட்டல் பேச்சு..!

எந்த பிரகஸ்பதி இதை தப்பாக எழுதி கொடுத்து இவர் வாசித்தார் என தெரியவில்லை. இவர்களுக்கு சொந்த வாசிப்பும், அறிதலும் இல்லாமல் இருப்பதுதான் வாடிக்கை

''முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போரில் தளபதியாக இருந்தவர் தந்தை பெரியார், மறைமலை அடிகள் போன்றோர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதற்காக பெரியார், கர்நாடக மாநிலம், பெல்லாரியில் சிறையில் அடைக்கப்பட்டார். "பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரைப் பின்பற்றுபவர்களான நாங்கள், சமூக நீதியை நிலைநிறுத்தவும், சமத்துவ சமுதாயத்தை நிறுவவும் என்றென்றும் போராடுவோம்" என்று கூறி இருந்தார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலினின் அல்லது பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகளின் உதடுகளில் பெரியார் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார். ''பெரியாரின் மீது சத்தியம் செய்யாவிட்டால் எந்தக் கட்சியும் தமிழ் அரசியலில் வெற்றிபெற முடியாது'' எனவும் தெரிவித்து இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

இதையும் படிங்க: சீமானின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.. ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக எதிர்கொள்ளுங்கள்..!

அவரது இந்தப் பேச்சு குறித்து விமர்சித்துள்ள மூத்த வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ்தளப்பதிவில், ''என்னப்ப இப்படி முட்டாளதானமான பேச்சுக்கள்… மறைமலை அடிகள், திருவிக, நாவலர்  சோமசுந்தர பாரதி ஆகியோர் 1936 இல் ஆங்கிலோயர் ஆட்சியில் முதல் இந்தி மொழி எதிர்ப்பு போரை நடத்தினர். அப்போது பெரியார் அங்கு எங்கே இருந்தார்?

இந்தி எதிர்ப்புப் சர்வாதிகாரியாக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதி  இந்தி மொழி எதிர்ப்பு நடை பயணம் மதுரையில் புறப்பட்டு சென்னைக்கு நடந்து வந்தார். அவரை வரவேற்று மறைமலை அடிகளின் புதல்வி நீலம்பரி அம்மையார் கடற்கரையில் கூட்டம்  நடத்தினர். அதில் ஈவேரா கலந்து கொள்கிறார். அதில் நீலம்பரி அம்மையார்  அவரை முதன்முறையாக பெரியார் என்று அழைக்கிறார். அப்போது மறைமலை அடிகள் மறந்துவிட்டார் என்று நினைவு.

பிறகு எப்படி மறைமலை அடிகளுக்கு முன் பெரியார் இந்தி எதிர்ப்பு போரில் இருக்க முடியும்? இப்படி வரலாற்றை பிழையாக பேசி நாட்டை ஏமாற்றி வருவது இவர்களின் இயல்பு.


 
எந்த பிரகஸ்பதி இதை தப்பாக எழுதி கொடுத்து இவர் வாசித்தார் என தெரியவில்லை. இவர்களுக்கு சொந்த வாசிப்பும், அறிதலும் இல்லாமல் இருப்பதுதான் வாடிக்கை.. என்னத்த சொல்வது..?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: திமுக நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான்- டாராகப் பொளந்த அண்ணாமலை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share