‘எங்களுக்கு துக்கம் இருக்குங்க உங்களப்போல் இல்ல’…திமுக மீது கடுப்பான செல்வப்பெருந்தகை; அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாள் துக்கம் அறிவித்துவிட்டு முதல்வரே அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது காங்கிரசாரை வேதனைப்படுத்தியுள்ளது. முதல்வர் நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாள் துக்கம் அறிவித்துவிட்டு முதல்வரே அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது காங்கிரசாரை வேதனைப்படுத்தியுள்ளது. முதல்வர் நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
திமுகவுக்கு இது போதாத காலம் போல இருக்கு. அண்ணா யூனிவர்சிட்டி மாணவி பாலியல் வழக்கில் தோழமை கட்சிகள் வேறு வழியில்லாமல் கடுமை காட்டும் நிலையில் திடீரென அமைதியின் திலகம் செல்வப்பெருந்தகை திமுக தலைமை மீது கோபமடைந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
திமுகவுடன் உறவை முறித்துக்கொண்ட காங்கிரஸ் 2016-ல் மீண்டும் உறவை புதுப்பித்ததிலிருந்து, பெண்ணை கட்டிய மருமகனிடம் பம்மும் மாமியார் போல் எதைப்பற்றியும் பேசாமல் அனைத்துக்கும் ஆமாஞ்சாமி போட்டு வருகிறது. ஆனால் திமுக அதே மாப்பிள்ளை முறுக்குடன் தன் நிலையை விட்டுக்கொடுக்காமல் நடந்து வருகிறது.
2019-ல் ஆரம்பித்த முறுக்கு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. 2021-ல் 25 தொகுதிகளில் காங்கிரஸை சுறுக்கியது திமுக. அதே போல் 2024 மக்களவை தேர்தலிலும் 9 தொகுதிகளை மீண்டும் தருவதற்கே படாத பாடு படுத்தியது. இந்நிலையில் கே.எஸ்.அழிகிரி போய் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்தார். வந்தவுடன் நாமும் முன்னேற வேண்டாமா? எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்பது, கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டாமா? என ஆரம்பித்தார். உடனடியாக அவரை எங்கு வைத்து எச்சரிக்க வேண்டுமோ அங்கு வைத்து எச்சரித்தார்கள். உடனே நான் அப்படி சொல்லவில்லை, பொதுவாக கூட்டம் என்றால் கொஞ்சம் மோடிவேஷன் பேசணும் அது கொஞ்சம் காரம் தூக்கலாகிவிட்டது என்று சொல்லி சமாளித்தார்.
பின்னர் அவ்வப்போது ஏதாவது சிக்கல் வந்தால் அதற்கு ஏற்றாற்போல் பேசி சமாளிப்பார் செல்வப்பெருந்தகை. காங்கிரஸ் திமுக மோதல் போக்கு வரும் நேரத்தில் அழகாக சமாளிப்பார், அதே நேரம் திமுகவுக்கு மற்ற டோழமைக்கட்சிகள் முட்டு கொடுப்பதுபோல் பெரும்பாலும் கொடுப்பதில்லை. இந்நிலையில் தான் விஜய் கட்சி ஆரம்பித்தார். அதற்கு கருத்து கூறும்போது அவர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார், இதனால் இந்தியா கூட்டணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர் கருத்து அவர் சொல்கிறார். வரட்டும் பார்ப்போம் என்று பட்டும் படாமலும் பேட்டி கொடுத்தார். அதே நேரம் திமுக கூட்டணி என்று சொல்லாமல் இந்தியா கூட்டணி என்றே செல்வப்பெருந்தகை கூறி வருவதன் மூலம் திமுக தான் காங்கிரஸ் கட்சி உள்ள இந்தியா கூட்டணியில் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி வருகிறார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு போகலாம், என்ற பேச்சு அடிக்கடி எழும் அடங்கும். தமிழக காங்கிரஸ் திமுகவுக்காக தாங்கள் சிலுவை சுமக்க வேண்டுமா? என்கிற கேள்வியை அடிக்கடி தங்களுக்குள் பேசி வருகிறார்கள். ஆனாலும் ராகுல் ஸ்டாலினின் நெருங்கிய நணபர் என்பதால் அடக்கி வாசிக்கிறார்கள். ஆனாலும் கார்த்தி சிதம்பரம் போன்றோர் அவ்வப்போது திமுகவையும், ஆட்சியையும் விமர்சிக்க தயங்கியது இல்லை.
இந்நிலையில் நேற்றை நிகழ்வால் செல்வப்பெருந்தகை வழக்கமாக இருப்பதைவிட திமுக மீது கடும் கோபமாக இருக்கிறாராம். அதற்கு காரணம் திமுக தொடர்ந்து காங்கிரஸை அவமதிப்பதுதான் என்கிறார்கள். ஆளுநரை எதிர்க்கலாம் என்று சொல்லிவிட்டு தனியாக முதல்வர் துணை முதல்வர் மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் விருந்தில் ஆஜர் ஆகிவிடுகிறார்.
இது என்ன மனப்பான்மை என மனம் வெதும்பும் காங்கிரஸார், நேற்றைய நிகழ்வால் கடும் கோபமடைந்து செல்வப்பெருந்தகையிடம் முறையிட அவரும் கோபப்பட்டுவிட்டாராம்.
அப்படி என்னதான் நடந்தது என்று விசாரித்தபோது செல்வப்பெருந்தகையின் கோபம் நியாயமானதுதான் என்று தெரிந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை தொடர்ந்து ஏழு நாள் அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நாடுமுழுவதும் கொண்டாடப்படவிருந்த காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தினம் கூட கொண்டாடப்படவில்லை. அனைத்து மாநிலங்களும் துக்கத்தை அனுஷ்டிக்கும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக அதை அலட்சியப்படுத்துவதாக காங்கிரஸார் வேதனைப்படுகின்றனர்.
மன்மோகன் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்னரே தமிழக அரசும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அறிவித்தது. புத்தக கண்காட்சி மட்டும் திறந்து மட்டும் வைக்கப்படும் என்றனர், ஆனால் துணை முதல்வர் உதயநிதி மகளிர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார், இதைவிட வேறொரு நிகழ்வுதான் காங்கிரஸ் கட்சித்தலைவரை கோபமடைய வைத்துள்ளது. திருவள்ளுவர் சிலை அமைந்ததன் 25 வது ஆண்டு விழாவை மூன்று நாட்கள் கொண்டாடவும் கண்ணாடி பாலம் திறப்பு நிகழ்வும் கன்னியாகுமரியில் நடப்பதாக இருந்தது.
மன்மோகன் மறைவை ஒட்டி இவ்விழாவை ஜனவரி இரண்டாம் தேதிக்குப்பின் நடத்தி இருக்கலாம், ஆனால் பிடிவாதமாக இரண்டுநாள் விழாவாக நடத்துகின்றனர். அதில் காங்கிரஸையும் கலந்துக்கொள்ள அழைத்தது மேலும் காங்கிரஸாரை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
இதனால் கடுப்பான செல்வப்பெருந்தகை நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணிக்கும் என்று தெரிவித்து விட்டார். முன்னாள் பிரதமருக்கு ஏழு நாள் துக்கம் ஜனவரி 2 முடிகிறது. எதிர்த்து களமாடும் பாஜகவே மத்திய அரசாக இருந்தும் துக்கம் அனுஷ்டிக்கிறது. ஆனால் கூட்டணியில் இருக்கும் திமுகவும் முதல்வரும் அது குறித்து கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து விழாவில் கலந்துக்கொள்வது காங்கிரஸாரை வேதனை அடைய வைத்துள்ளது.
நேற்று தூத்துக்குடியில் முதல்வர் கலந்துக்கொள்ளும் கள ஆய்வு கூட்டம், இன்று காலை காலை உணவு திட்ட விரிவாக்கம், திருவள்ளுவர் சிலை நிகழ்ச்சி, பாலம் திறப்பு என துக்க நாளில் முதல்வரே கலந்துக்கொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் நடத்துவது என்ன வகை பண்பு என காங்கிரஸார் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியைபுறக்கணிப்பது குறித்தும், தங்களது வேதனையை வெளிப்படுத்துவது குறித்தும் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வப்பெருந்தகையை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளதாக தகவல்