×
 

யார் இந்த பர்வேஷ் வர்மா?! அரவிந்த் கேஜ்ரிவாலை வீழ்த்திய பாஜகவின் ‘பாகுபலி’

யார் இந்த பர்வேஷ் வர்மா?

கால்நூற்றாண்டு காத்திருப்புக்குக்குப்பின் பாஜக டெல்லி அரியணையை உச்சி முகரப் போகிறது. 
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியைப் பிடித்து, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சியை அகற்றி அரியணை ஏறப் போகிறது. 

எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சிம்மசொப்னமாகத் திகழ்ந்தாலும், பாஜகவுக்கே பலநேரங்களில் சிற்றெரும்பாக சிக்கல் கொடுத்து, சட்டப்போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர் ஆம்ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால். அந்த கேஜ்ரிவாலை இந்த தேர்தலில் 4089 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாஜகவுக்கு பாகுபலியாக திகழ்ந்தவர் பர்வேஷ் வர்மா. 

டெல்லியில் ஒருகாலத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸின் ஷீலா தீட்சீத்தை ஆம்ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 64.14% வாக்குகள் பெற்று தோற்கடித்தார். ஆனால், இன்று அரவிந்த் கேஜ்ரிவாலை மண்ணைக் கவ்வ வைத்துள்ளார் பாஜகவின் பர்வேஷ் சர்மா. 3 முறை டெல்லி முதல்வராக இருந்த கேஜ்ரிவாலை வீழ்த்துவது சாதாரணமல்ல, மக்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கை சிதைத்து, நம்பிக்கையை உடைத்து வெல்லவைத்துள்ளார் பாஜகவின் பாகுபலி வேட்பாளர் பர்வேஷ் சர்மா.

இதையும் படிங்க: பாஜவுக்கு வாழ்த்துகள்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.. அரவிந்த் கேஜ்ரிவால் உருக்கம்

யார் இந்த பர்வேஷ் சர்மா

கடந்த 1977ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தவர் பர்வேஷ் சர்மா. டெல்லி ஆர்கே புரத்தில் உள்ள அரசுப்பள்ளியில் படித்த பர்வேஷ் சர்மா, டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கிரோரி மால் கல்லூரியில் படித்தார். ஃபோர் ஸ்கூல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் எம்பிஏ முதுநிலை பட்டம் முடித்தார்.

ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர், டெல்லி முன்னாள் முதல்வர் சஹிப் சிங் வர்மாவின் மகன்தான் பர்வேஷ் சர்மா. இவரின் சித்தப்பா ஆசாத் சிங் டெல்லி வடக்கு மாநகராட்சியின் மேயராகஇருந்தார், 2013ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லி முந்த் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பர்வேஷ் சர்மா 2013ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மெஹ்ரூலி தொகுதியில் போட்டியிட்ட பர்வேஷ் சர்மா, காங்கி்ரஸ் வேட்பாளர் யோகானந்த சாஸ்திரியை தோற்கடித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பியாகினார், 2019ம் ஆண்டு தேர்தலிலும் பர்வேஷ் வென்றார், 2024 தேர்தலில் பர்வேஷ் போட்டியிடவில்லை.

பர்வேஷ் எம்.பியாக இருந்தபோது, ஊதியங்களுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழு, எம்.பி.க்களின் படிகளை நிர்ணயிக்கும் குழு, நகரமேம்பாட்டு நிலைக்குழுவில் பர்வேஷ் இடம் பெற்றிருந்தார். 
2019ம் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகாபல் மிஸ்ராவை 5.78லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பர்வேஷ் சர்மா வென்றார். 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவாலை தீவிரவாதி எனப் பேசியதற்காக 24மணிநேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்தால் தடை பெற்றவரும் பர்வேஷ் சர்மாதான்.

தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின்போது பர்வேஷ் சர்மா தனக்கு ரூ.89 கோடி சொத்து இருப்பதாகவும், மனைவி ஸ்வாதி சிங்கிடம் ரூ.24.40 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவித்தார். வர்மா தன்னிடம் ரூ.2.20 லட்சம் ரொக்கப்பணம் இருப்பதாவும், மனைவி ஸ்வாதியிடம் ரூ.50 ஆயிரம் இருப்பதாகவும், ரூ.52.75 கோடிக்கு பங்குப்பத்திரங்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். காப்பீடு பிரிவில் ரூ.17 லட்சம் முதலீடும், மனைவி பெயரில் ரூ.5.5 லட்சம் முதலீடும் இருப்பதாகத் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட பர்வேஷ் வர்மா, மத்தியஅரசின் சிறந்த நிர்வாகம், திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைத்து, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள், அரவிந்த் கேஜ்ரிவாலின் நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்தார். 

டெல்லியில் உட்கட்டமைப்பை மோசமாக வைத்திருக்கும் ஆம் ஆத்மியையும், காற்று மாசை இன்னும் சமாளிக்க முடியாத ஆம்ஆத்மி அரசு என பர்வேஷ் சர்மா கடுமையாக விமர்சித்தார். டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி அறிவித்த பல்வேறு திட்டங்கள், சலுகைகள் போல், பாஜக சார்பில் பர்வேஷ் சர்மாவும்  பல திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார்.

இதையும் படிங்க: மதுபானத்தில்தான் கவனம்: அரவிந்த் கேஜ்ரிவாலை விளாசிய அன்னா ஹசாரே 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share