×
 

மத்திய முதியோர் நலத்துறை வருமா?: மனுதாரர் அரசிடம் முறையிட உச்ச நீதிமன்றம் அனுமதி..

முதியோர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க மத்திய அரசை அணுகலாம் என்று மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

முதியோர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்க உத்தரவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் தலையிடவோ உச்ச நீதிமன்றம் முயலாது என்று மனுதாரர்களிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கறிஞரும் மனுதாரருமான பிரியதர்ஷினி சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், வழக்கறிஞர் ராகுல் ஷியாம் பண்டாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். 
அதில் “ நாட்டில் முதியோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது, உலகளவில் அதிக முதியோர் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது. ஆதலால் முதியோர் நலனுக்காக கொள்கைகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, ஓய்வூதியம், சுகாதார திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கவும், கண்காணிக்கவும், பராமரிக்கவும் தனி அமைச்சகம், துறை உருவாக்க வேண்டும். 
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதியோர்  அதிகரிப்பை ஒரு தனி அமைச்சகம் அல்லது துறை அமைத்து திட்டவட்டமாகக் கையாளவிட்டால், சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

இந்தியாவில் முதியோர் மக்கள்தொகை 2023 அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளோம். அதில், 2022ம் ஆண்டில் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் நாட்டில் 14.90 கோடி பேர் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் இந்த எண்ணிக்கை 10.50 சதவீதமாகும், 2050ம் ஆண்டுக்குள் முதியோர் எண்ணிக்கை இருமடங்காகி, 20.8% சதவீதமாக அதிகரிக்கும்,34.70 கோடியாக உயர்வார்கள்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21ன் கீழ் முதியோர் பலவீனமான பிரிவு, இவர்களுக்கு தனித்த சவால்கள் உள்ளன, பாதுகாப்பு, நலன் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் 15 பிரிவு தெரிவித்துள்ளது.
மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ்தான் 1985ம் ஆண்டிலிருந்து மத்திய மகளி்ர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சமூக பாதுகாப்புப் பிரிவு, மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோருடன் மூத்த குடிமக்களின் பிரச்சினைகளை இணைத்துள்ளது. ஆதலால் முதியோருக்கு தனி அமைச்சகம் உருவாக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டது.

இதையும் படிங்க: தமிழக அரசுடன் கவர்னர் மோதல்: நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள்; உச்ச நீதிமன்ற வழக்குகள் முழு விவரம்


இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு, “ நீதிபதிகளும் மூத்த குடிமக்கள் வரிசையில்தான் இருக்கிறார்கள். முதியோர் நலனுக்காக தனி அமைச்சகம், துறை உருவாக்க மத்திய அரசு உத்தரவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் தலையிடவோ உச்ச நீதிமன்றம் முயலாது. அதேசமயம், மனுதாரர்கள் தாராளமாக மத்திய அரசிடம் தங்களின் கோரிக்கையை முன்வைக்கலாம் அதற்கு அனுமதி உண்டு என்று மனுதாரர்களிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை! ஆயுஷ் மான் பாரத் திட்டத்தில் டெல்லி அரசு சேர முடியாது

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share