போதை ஊசிகள் பயன்படுத்திய இளைஞர்கள்.. கொத்தாக அள்ளிய போலீசார்!
பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட போதை ஊசிகளை பயன்படுத்திய எட்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை பகுதியில் உள்ள இரட்டை கண் பாலம் அருகே சிலர் தடை செய்யப்பட்டுள்ள போதை ஊசிகளை பயன்படுத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இணங்க நின்று கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது போலீசார் வருவதை நோட்டமட்ட இளைஞர்கள் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
தொடர்ந்து போலீஸ் சார் அவர்களை துரத்தி மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் அரசு தடை செய்யப்பட்ட போதை ஊசிகள் இருந்தது தெரிய வந்தது. இதனை எடுத்து போலீசார் சுற்றி வளைத்த இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பலுசிஸ்தானின் பஷீர்... பாகிஸ்தான்- சீனாவுக்கும் ஒரே நேரத்தில் கற்பித்த பி.எல்.ஏ தளபதி..!
முன்னதாக அவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதை ஊசிகள் கிடைத்தது எப்படி இதற்கு பின்னால் இயங்கும் நபர்கள் யார் என விசாரணையை போலீசார் தீவிர படுத்தினர். அப்போது பல்லடத்தைச் சேர்ந்த முரளி குமார் இளைஞர்களுக்கு போதை ஊசி சப்ளை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து முரளி இளைஞர்களுக்கு சப்ளை செய்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர். முன்னதாக காவல் நிலையம் வரவழைக்கப்பட்ட வெட்டு இளைஞர்களையும் போலீசார் 8 இளைஞர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... பாஜக ஆளும் டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!