நெல்லை மாவட்டம் பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் வைகுண்டம். இவர் மீது 5 கொலை உட்பட பல வழக்குகள் உள்ளன. ஊராட்சி தேர்தல் மோதல், ஒரே சமூகத்தில் நடந்த கொலைகள், அடிதடி வழக்கு, போன்றவற்றில் வைகுண்டம் சம்பந்தப்பட்டிருந்தார். இந்த குற்ற வழக்குகளின் விசாரணை 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் சொல்ல வைகுண்டம் ஒப்புக் கொண்டார். வைகுண்டம் சாட்சி சொன்னால் தாங்களுக்கு தண்டனை கிடைக்கும் என நினைத்த குற்றவாளிகள், மார்ச் 10ம் தேதி காலையில் கால்வாயில் குளிக்க சென்ற வைகுண்டத்தை வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் இரு பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பரபரப்பை ஏற்படுத்திய கொலை... ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!
இந்த வழக்கு நெல்லை 2வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாட்சியங்களை ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான செல்வராஜூக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இவருக்கு உடந்தையாக இருந்த அந்தோணி பிரபாகர், அருள் பிலிப், ஆண்டோ நல்லையா, பாபு அலெக்சாண்டர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வ லீலா, ஜாக்குலின் ஆகியோருக்கு 2மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கே. சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். கொலை வழக்கில் தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தால் நெல்லை நீதிமன்றம் பரபரப்பானது. இதையத்து குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெற்ற மகனுக்கே எமனாக மாறிய தாய்...ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!