பழைய பாம்பன் பாலம் கட்டி 110 ஆண்டுகளை கடந்த நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் உறுதித்தன்மை குறைந்தது. அதுமட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்துக்கு பயன்படும் தூக்கு பாலத்தில் பழுது ஏற்படவே, பாதுகாப்பு கருதி 2022 ஆம் ஆண்டு ரயில்சேவை நிறுத்தப்பட்டது. பிறகு பழைய பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில்,550 கோடி ரூபாய் மதிப்பில் பெரும் முயற்சிக்கு பிறகு புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பா பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இது 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்ட, 99 இடைவெளி இணைப்புகளையும் 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பானையும் கொண்டுள்ளது. இந்த பாலம் 17 மீட்டர் உயரம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதுடன் சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும், கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மேலும், பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிடுகிறார்.

இதையும் படிங்க: கூட்டாட்சினு சொன்னாலே பிஜேபிக்கு அலர்ஜி! மார்க்சிஸ்ட் மாநாட்டில் வெளுத்து வாங்கிய முதல்வர்…
அதன்பிறகு, 12.45 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும், புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர், ராமேஸ்வரம்- சென்னை (தாம்பரம்) இடையிலான புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: சுயநலனுக்காக மொழி பிரச்சனைய கிளப்புறாங்க.. ஸ்டாலினை மறைமுகமாக அட்டாக் செய்த யோகி..!