×
 

உஷாரான அமித் ஷா... 4 மணி நேரம் முன்னாடியே முக்கிய நபருடன் சந்திப்பு - காரணம் என்ன?

சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துள்ளார். 

2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பான நகர்வுகள் இப்போதே தொடங்கியுள்ளன. சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக மூத்த தலைவர்களுடன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

எனவே, கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த நிலையில், தற்போது அந்த கூட்டணி மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் துளிர்க்க போகிறதா? என்பதே மையக் கேள்வியாக அமைந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இணைப்பது மற்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவரை தேர்வு செய்வது என இரண்டு முக்கியமான பணிகளை முடிக்கவே அமித் ஷா சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை வந்துள்ள அமித்ஷா, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். அமித்ஷா - குருமூர்த்தி மட்டுமே ஆலோசித்து வருவதாகவும் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இல்லை எனவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தமிழக அரசியலை புரட்டிப்போடப் போகும் அமித் ஷா... இன்று இரவு மீட்டிங்; ட்விஸ்ட் வைக்கும் பாஜக!

முதலில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க சென்ற அமித் ஷா அங்கிருந்து அப்படியே ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதாவது சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, அமித் ஷா மீண்டும் தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு திரும்புவதாகவும், செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதாகவுமே நிகழ்ச்சி நிரல் இருந்தது. 

ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) செய்தியாளர் சந்திப்பு என்று திரையிடப்பட்ட  LED திடீரென  மாற்றப்பட்டது. கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் வராததால் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் பேனர் மாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்செட் ஆன அமித் ஷா அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவே ஆடிட்டர் குருமூர்த்தியை 4 மணி நேரம் முன்னதாகவே சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: காலரை தூக்கிவிட்டு கெத்தா வரப்போகும் நயினார் நாகேந்திரன்; டெல்லி பறந்ததன் பரபர பின்னணி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share