"அது என்னோட விருப்பம்...மிரட்டலாம் கூடாது".. டென்ஷனான சபாநயகர் அப்பாவு
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர் அப்பாவுவைப் பார்த்து மிரட்டல் தொனியில் பேசியதால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர் அப்பாவுவைப் பார்த்து மிரட்டல் தொனியில் பேசியதால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது.
இன்றைய சட்டப்பேரவையில் நிகழ்வின் கேள்வி பதில் நேரத்தின் போது, புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான அருள்மொழி தேவன் கேள்வியை வாசிக்கத் தொடங்கினார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் கூடுதல் நேரம் கேட்டு, அமர்ந்து கொண்டே சபாநாயகரைப் பார்த்து பேசியுள்ளார். இதனால் டென்ஷன் ஆன அப்பாவு, “அம்மன் அர்ஜுனன், நீங்க ஒரு ஆள் இல்ல. அதிமுகவில் மொத்தம் 66 பேர் இருக்கிறீங்க. இப்ப ரெண்டு நாளைக்குள் 66 பேருக்கும் துணை கேள்வி கொடுக்க முடியாது. உட்கார்ந்துகிட்டு இதெல்லாம் மிரட்டக்கூடாது. அது என் விருப்பம், உட்காருங்க. கேள்விக்கு தொடர்பு இருந்தால் தான் அனுமதி தருவேன்” என பேசினார்.
இதையும் படிங்க: ஓஹோ... இதுக்குத்தான் அப்பாவு மேல தீர்மானமா?... அதிமுகவை அடித்து நொறுக்கிய மு.க.ஸ்டாலின் ...!
தொடர்ந்து, ஆளுங்கட்சிக்கு ஒன்னு இங்க எதிர்கட்சிக்கு ஒன்னு தான் தந்துகிட்டு இருக்கிறோம். உங்க ஆள் தானே பேசுது. இல்ல இதை பற்றி டிஸ்கஷன் பண்ணக்கூடாது, உட்காருங்க. எல்லாரும் ஒரு கேள்விதான் துணை கேள்வி கேட்பாங்க, கேட்காத ஆட்கள் பார்த்து தான் கேள்வி கேட்க அனுமதி கொடுத்துட்டு இருக்கேன். அக்ரிகிருஷ்ணமூர்த்தி ரெண்டு தடவை கேட்டாரு, ஒருமுறை கொடுத்திருக்கு. அவரும் திரும்ப கொடுக்கவில்லை. யாரெல்லாம்இதுவரை கேட்காம இருக்காங்களோ அவங்கள பார்த்து தான் வாய்ப்பு கொடுத்துக்கிட்டு இருக்கோம். இதுல எந்த பாகுபாடும் கிடையாது.
இது மாதிரி பேசினால் நான் நடவடிக்கை எடுப்பேன். இதுபற்றி பேசக்கூடாது, உட்கார்ந்துட்டும் பேசக்கூடாது கேள்வி பதில் வந்து ஒரு முறை வச்சு சரியா தான் போயிட்டு இருக்கு. எல்லாத்துலையுமே ஜனநாயக முறைப்படி சட்டப்படி விதிப்படி மரபு படிதான் எல்லாமே நடக்கிறது. தவிர யாருக்கும் ஆள் பார்த்து கொடுக்கல. இங்கு ஆளுங்கட்சிக்கு ஒரு துணை கேள்வி கொடுத்தால், அடுத்த கேள்வி எதிர்க்கட்சிதான் வருது. இதுல ஒரு ஆள் மட்டும் எனக்கு தரல, அப்படின்னு சொல்லி உட்கார்ந்துகிட்டு பேசுறது நாகரிகம் இல்லை. அதுவும் உட்கார்ந்து கொண்டு என்னை மிரட்டக்கூடாது என கடுப்புடன் கண்டித்தார்.
இதையும் படிங்க: சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.. ஆதரவு -63, எதிர்ப்பு - 154 வாக்குகள் பதிவாகின..!