இவுங்களுக்கு மனசுல ஜெயலலிதான்னு நினைப்பு.. அதிமுகவை டேமேஜ் ஆக்கிய டிடிவி தினகரன்..!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும்.
தமிழகத்தில் கடந்த 10 தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது என்றும் தற்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக திமுக அரசு மாற்றிவிட்டதைக் கண்டித்து அமமுக சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற்ற கடந்த 10 தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. அதனால், அதிமுக பலவீனம் அடைந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும். 2026 சட்டப் பேரவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாக உருவெடுக்கும். தற்போது அதிமுகவின் தலைமையில் இருப்பவர்கள் தங்களை ஜெயலலிதா என்று நினைத்து கொண்டுள்ளனர். அது வெறும் மாய பிம்பம். எனவே அதிமுக தொண்டர்கள் ஏமாற வேண்டாம். இவ்வாரு டிடிவி தினகரன் கூறினார்.
இதையும் படிங்க: அமமுகவை பாஜகவுடன் இணைக்க அழுத்தம்... டி.டி.வி.தினகரனின் கெத்தான முடிவு..!
இதையும் படிங்க: ஒரு ஜீவனும் முன்வரவில்லை… நீங்கள் அரசியலில் இருக்க வேண்டுமா..? டிடிவி-க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!