×
 

Laptop வாங்கப்போறீங்களா..? இதெல்லாம் செக் பண்ணாம வாங்காதீங்க

நீங்க ஒரு லேப்டாப் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா அதுல என்னென்ன அம்சங்கள் கவனிச்சு வாங்கணும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

நீங்க ஒரு லேப்டாப் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா அதுல என்னென்ன அம்சங்கள் கவனிச்சு வாங்கணும் என்பதை இந்த  செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

கொரானாவிற்கு பிறகு மாணவர்கள் ,பணியாளர்களுக்கு  லேப்டாப் தேவை அதிகமாகியுள்ளது.  உங்கள் பட்ஜெட்டுக்குள் அல்லது எந்த லேப்லாட் வாங்க நினைத்தாலும் அதிலுள்ள முக்கிய அம்சங்களை கவனித்து வாங்க வேண்டும்.

எந்த நோக்கத்திற்காக லேப்டாப்களை  வாங்குகிறீர்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் தேவைகேற்ப லேப்டாப்களின் முக்கிய அம்சம் மற்றும் விலையையும் ஒப்பிட்டு வாங்கலாம்.மேலும் லேப்டாப் வாங்கும் போது அதன் வாரண்டி, கேரண்டி செக் செய்து வாங்கவும்.

இதையும் படிங்க: 'ஆல் பாஸ்’ முறை ரத்து.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

லேப்டாப்களின் டிஸ்பிளே இன்ச் உங்கள் தேவையைப் பொருத்தே  இருக்க வேண்டும். பொதுவான   வேலைகளுக்கு 14 இன்ச் லேப்டாப்களே போதும் ஆனால்   எடிடிங், கேமிங், போன்ற பயன்பாட்டிற்காக லேப்டாப் வாங்குபவர்கள் 17 இன்ச் கச்சிதமாக இருக்கும்.

எல்லா லேப்டாப்களிலும் முக்கியமாக பார்க்க வேண்டியது ஓஸ் எனப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம்.  Windows, mac os, linux - ல் போன்ற ஓஸ்களில் லேப்டாப்கள் பயனாளர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றவை.

10th அல்லது 11th Gen intel Core i9 ப்ராசஸர் லேட்டஸ்ட்டானது என்றாலும் ஆஃபிஸ் வேலை அல்லது டைப்பிங் சார்ந்த லைட் வேலைகளுக்கு பொருத்தமாக இருக்கும். நீங்கள் கேமிங், எடிடிங், அதிக மென்பொருள் சார்ந்த வேலைகள் இருக்கும் என்றால் குறைந்தபட்சம் Intel Core i5/AMD Ryzen 5 ப்ராசஸரை கொண்ட ஒரு லேப் வாங்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் லேப்டாப்கள் குறைந்தபடசம் 8 GB க்கு மேல் இருக்கும் RAM மாடல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.. 4 GB RAM கொண்டவற்றில் அதிக செயல்திறன் இருக்காது. அதிகமாக லேப்டாப் பயன்படுத்துபவர்கள்  6GB RAM மேல் வாங்குவது சிறந்தது.

மேலும் ஸ்டோரேஜ் ,எடை ஆகிய அம்சங்களையும் கருத்தில் கொண்டு லேப்டாப் வாங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இதையும் படிங்க: புது வெள்ளை மழையில் கொடைக்கானல் ... உறைபனியை ரசிக்க குவியும் சுற்றுலாபயணிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share