×
 

பாகிஸ்தானில் நடக்கும் ரத்த வெறியாட்டம்... சீனாவால் ஏற்பட்ட கேடு- உரிமைக்காக போராடும் பி.எல்.ஏ..!

இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்திற்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பலூச் விடுதலைப் படை ஒரு சிறப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாக நம்பப்படுகிறது.

பலுசிஸ்தானில் நடந்து வரும் இயக்கம் மீண்டும் மாபெரும் பயங்கரவாத அச்சுறுத்தலை கையில் எடுத்துள்ளது. பலூச் விடுதலைப் படை, பாகிஸ்தானின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்தி, பயணிகளைத் தவிர, பல பாகிஸ்தான் வீரர்கள், போலீசார், ஐஎஸ்ஐ அதிகாரிகள் உட்பட ரயிலில் இருந்த 182 பேரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தது. அதே நேரத்தில், பயங்கரவாதிகளுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவமும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மோதலில் இதுவரை 20 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ராணுவமும், பலூச் விடுதலைப் படையின் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளது.

இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்திற்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.  இந்த நடவடிக்கையின் மூலம் பலூச் விடுதலைப் படை ஒரு சிறப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாக நம்பப்படுகிறது. இதில், மிகப்பெரிய பிரச்சினை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை  மூடுவதற்கான கோரிக்கையை உள்ளடக்கியது.

இதையும் படிங்க: 'திமுகவின் பித்தலாட்டம்... மொழியை வைத்து அரசியல்..!'- ஆதாரங்களை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்..!

பலுசிஸ்தானில் நீண்டகாலமாக பிரிவினைவாத இயக்கம் இயங்கி வருகிறது.பலூச் விடுதலைப் படை தங்கள் பகுதியில் சுயாட்சிக்காகவும், சீனாவின் முதலீட்டிற்கு எதிராகவும் போராடுகிறது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்  பலுசிஸ்தானின் வளங்களை சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். அதேவேளை, குவாதர் துறைமுகம் உட்பட பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களிலும் சீனா முதலீடு செய்துள்ளது. இதனால், பலூச் மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. 

உள்ளூரில் உள்ள குடிமக்கள் குவாதருக்குள் நுழைய சிறப்பு அனுமதி பெற வேண்டும். அத்தோடு, அங்குள்ள மக்கள் மீன்பிடிக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளனர். இது அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்,  பாகிஸ்தானுக்கு ஒரு லட்சியத் திட்டம். ஆனால், அது பலுசிஸ்தானுக்கு ஒரு புதிய பிரச்சினை. இந்தத் திட்டத்தால் உள்ளூர் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மாறாக அவர்களின் நிலம், நீர் மற்றும் வளங்கள் மீது சீனாவின் கட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் பலூச் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குவாதர் துறைமுகம் சீனாவுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால்,  பலூச் மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம். இங்கு இயற்கை எரிவாயு, தாமிரம், நிலக்கரி மற்றும் தங்கம் ஆகியவற்றின் பரந்த இருப்புக்கள் உள்ளன. ஆனால் உள்ளூர் பலூச் மக்களுக்கு இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்படவில்லை. இதனால்தான் அந்தம மக்கள் பிற பிரிவினைவாத குழுக்களுடன் இணைந்து பாகிஸ்தான் அரசுடனும், இராணுவத்திற்கும் எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் தரவுகளின்படி, பலுசிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர். ஜனவரி 2024 நிலவரப்படி, 2011 முதல் பாகிஸ்தானில் 10,078 கட்டாயக் காணாமல் போன வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 2,752 பலுசிஸ்தானிகள்.

அதேவேளை, 2001 முதல் 2017 வரை சுமார் 5,228 பலூச் மக்கள் காணாமல் போயுள்ளதாக வாய்ஸ் ஃபார் பலூச் மிஸ்ஸிங் பேர்சன்ஸ்  அமைப்பு கூறுகிறது. காணாமல் போன இந்த மக்களை வலுக்கட்டாயமாகக் கடத்தி கொலை செய்ததாக பாகிஸ்தானின் இராணுவம், உளவு அமைப்புகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் இராணுவம் தங்களுக்கு எதிராக அடக்குமுறைக் கொள்கையை கடைப்பிடிப்பதாக  பலூச் பயங்கரவாத அமைப்புகள் நம்புகின்றன. பலூச் மக்களின் குரலை நசுக்க கட்டாயக் கைதுகள், கொலைகள் மற்றும் சித்திரவதைகளை பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால்தான் இப்போது பலூச் அமைப்புகளும் வா.. வந்து பார் என நேரடியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளன.

இதையும் படிங்க: இந்தியாவை பாரத் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிரடி கோரிக்கை.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share