×
 

குளிக்க சென்ற மாணவன் வாய்க்காலில் மூழ்கி பலி.. போலீசார் விசாரணை..!

சூலூர் அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை அருகே தாசநாயக்கன்பாளையம் வழியாக பிஏபி சொல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றன. இந்நாளில் பாசனத்திற்காக இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் வாய்க்காலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பொள்ளாச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனை அடுத்து அந்த மாணவர் அவரது நண்பர்களுடன் பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக சென்று உள்ளார். அப்போது, அப்போ அப்போது ஆழம் தெரியாமல் வாய்க்காலில் இறங்கிய மாணவரை அலை மோதிக் கொண்டு வந்த தண்ணீரானது மாணவரை இழுத்துச் சென்றுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும், மீண்டும் பதவி உயர்வா..? இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..!

இதுகுறித்து அம்மாணவரின் சக நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரின் வேண்டுகோளுக்கிணங்க தீயணைப்பு துறையினர் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாணவரின் உடல் பி ஏ பி வாய்க்கால் பாலத்தில் கரை ஒதுங்கிய நிலையில் மாணவரின் உடலை தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து மாணவரின் உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் பகுதியில் வரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திடீரென கேட்ட பயங்கர சத்தம்... குலுங்கிய வீடுகள்... பீதியில் திண்டுக்கல் மக்கள்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share