×
 

கோவையில் பூட்டிய வீட்டிற்குள் நடந்த பயங்கரம்... எங்கு பார்த்தாலும் ரத்தம்... அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...!

கோவையில் மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சூலூரில் தனியார் பள்ளி ஆசிரியையை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவியை கொன்ற பிறகு கேரளாவின் பாலக்காட்டிற்கு சென்று கணவர் தற்கொலை செய்து கொண்டார். 

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார். இவர் கேரள மாநகர் திருச்சூரைச் சேர்ந்தவர், இவரது மனைவி சங்கீதா கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: கூலிப்படையை ஏவி மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்.. கள்ளக்காதலை கண்டித்ததால் வெறிச்செயல்..

இந்நிலையில் இன்று காலை சங்கீதா, அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சவமாக கிடப்பதாக சூழலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் சங்கீதா கிடந்த நிலையை பார்த்தபோது அருகில் முழுவதும் ரத்தம் சிந்திய நிலையில் உடல் கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு மோப்பு நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டதோடு, சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது கணவர் பாலக்காடு அருகே கேரள மாநிலத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவி இங்கே இறந்து கிடக்கின்ற நிலையில் அவர் அங்கே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அவரே மனைவியை  கொலை செய்துவிட்டு, கேரளாவில் சென்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலன்.. டீயில் எலிமருந்து கலந்து கொடுத்த காதலி.. முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் எனவும் சவால்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share