வெள்ளாற்றில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்த சோகம்..! கதறி துடித்த பெற்றோர்..!
கடலூரில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வெள்ளாாற்றில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் உபயதுல்லா, முகமது அபில், முகமது பாசிக் ஆகிய மூன்று சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து விறு விறுவென உயர்ந்ததாக தெரிகிறது. அதனை சமாளிக்க முடியாமல் மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. படுகாயம் அடைந்த 18 பேர் கதி?
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளிங்கால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளாற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலங்கள் மீட்கப்பட்டன.
ஆற்றில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கள்ளநோட்டு அச்சடிப்பு விவகாரம்.. போலீசை கண்டதும் தப்பி ஓடிய விசிக நிர்வாகி... போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!