×
 

ஸ்ட்ரக்சர் கொடுக்காமல் நோயாளி அலைக்கழிப்பு.. மகளே தாயை தூக்கிச் சென்ற அவலம்..!

ஈரோடு அருகே அரசு மருத்துவமனையில் வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர் கொடுக்காமல் அலைக்கழித்ததால் மகளே தாயே தூக்கிச் செல்லும் வீடியோ வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.

ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணா என்பவர் வேலை நிமித்தமாக சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் ஒன்று மோதியதில், மூதாட்டி சொர்ணத்திற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மூதாட்டி சொர்ணத்தை மீட்ட அவரது மகள் வளர்மதி, ஆட்டோ மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது, மூதாட்டி சொர்ணத்தைக் கண்ட மருத்துவர்கள் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு மூதாட்டியை அழைத்துச் செல்வதற்காக வீல்சேர் அல்லது ஸ்ட்ரெச்சர் தருமாறு கேட்டபோது, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வலியால் துடித்துக் கொண்டிருந்த மூதாட்டி சொர்ணத்தை, அவரது மகள் வளர்மதி  அவசர சிகிச்சை பிரிவு இருக்கும் இடம் வரையில் சொர்ணத்தை தன்னந்தனியாக தூக்கிக்கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: போலி ஆதார் கார்டு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த வடமாநிலத்தவர்கள்.. மடக்கிப்பிடித்த போலீசார்.. 

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க மருத்துவமனை சூப்பிரண்டு மற்றும் ஆர்எம்ஓ ஆகிய இருவருக்கும் மெமோ வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து இருவரும் கொடுத்த விளக்கத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பணிக்கு வராத அரசு மருத்துவர்..? வேறு டாக்டர் வைத்து சிசேரியன்.. பிறந்த 10 நிமிடத்தில் இறந்த குழந்தை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share