சுற்றுலா பயணிகளே உஷார்.. கொடைக்கானலுக்கு போறதா இருந்தா இத தெரிஞ்சிட்டு போங்க.. ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!
கொடைக்கானலுக்கு தடை செய்யப்பட்ட தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலை கொண்டு சென்றால் வாகனங்களின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் எழில் நிறைந்த காட்சிகளுடன் ரம்யமாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்குள்ள இயற்கை வளங்கள் கோடை காலத்தில் மக்களின் வாசஸ்தலமாக அமைந்துள்ளது. கோடை காலத்தில் கொடைக்கானலில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், இதன் ரம்யத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதிலும் கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படும்.
இவ்வாறு தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக இயங்கி வரும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள இயற்கை வளங்களுக்கு ஆபத்தான சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய பகுதியாக பாலித்தீன் பைகள் ஐந்து லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த மாவட்ட அரசு தடை விதித்துள்ளது. இதனை தீவிரமாக அமல்படுத்தும் விதமாக கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வகையான வாகனங்களிலும் இந்த சோதனை தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தவெகவிற்கு வியூகம் அமைக்கப்போவதில்லை... விஜய் முன்பே பகிரங்கமாக அறிவித்த பிரசாந்த் கிஷோர்...!
மேலும் தடையை மீறி கொண்டு செல்லப்படும் பாலத்தின் பைகள் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஒரு சில சுற்றுலா பயணிகள் ஐந்து லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களை எடுத்து வருவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இதை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதன்படி பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஐந்து லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் கொண்டு சென்றால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'பாலிசி ஃபெயிலியர்… கபடதாரிகள்…'- திமுக ஆட்சியைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா..!