×
 

போலி திராவிடம்...! ரங்கராஜ் பாண்டேக்களுக்குடன் நட்பு… தலித்துகள் மீது வெறுப்பா..? குமுறும் கோபி நயினார் தரப்பு ..!

கம்யூனிஸ்டுகளையும்,  அம்பேத்காரிஸ்டுகளையும் பகை சக்தியாக பார்க்கிறது. ரங்கராஜ் பாண்டேவை கொஞ்சுகிறது. கோபி நாயனார்களை வெறுக்கிறது.

கும்மிடிப்பூண்டி அருகே கிராவல் மண் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கோபிநயினார் உட்பட 44 பேர் மீது போலீஸார் இம்மாதம் 2ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் அடுத்த கரடிபுத்தூர் கிராமத்தில் கள்ளாங்குத்து வகையை சேர்ந்த ஐந்து ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தில், சென்னை உள்வட்ட சாலைப்பணிக்காக தனியார் கிராவல் மண் குவாரி செயல்பட சமீபத்தில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கிராவல் மண் குவாரியை கடந்த பிப்ரவரி 24ம் தேதி முற்றுகையிட்டு, பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பிப்ரவரி 28 - ம் தேதி கிராவல் மண் குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கரடிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று, தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநரும், விசிக நிர்வாகியுமான கோபிநயினார் மற்றும் பொதுமக்கள் கரடிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கிராவல் மண் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 45- க்கும் மேற்பட்டோரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர் அப்போது அதில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ராகுல்காந்தியின் கேடுகெட்ட செயல்..! கண்டிக்காமல் 'ஹிந்தி' ராகம் பாடும் திராவிட கூட்டம்..!

கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டாலும், கரடிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், சட்டவிரோதமாக கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக திரைப்பட இயக்குநர் கோபிநயினார் உட்பட 44 பேர் மீது பாதிரிவேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் கோபி நயினார் திராவிடர் கழகம் வழங்கிய தந்தை பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப்பதிவில் பகிர்ந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப்பதிவில், ''நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தின் கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது.
 
நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.


 
என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன். தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது.

இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது. தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை.


 
இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம். இந்தியா முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும், எதிர்காலத்தில் எனக்கும் நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை'' எனத் தெரிவித்து இருந்தார். 

கோபி நயினாரின் இந்த முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து திராவிடர் கழகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.''திமுகவின் இணைய ஐடி விங் இது போன்ற செயல்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.பாஜக/ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான போரில் அம்பேத்காரிஸ்டுகளும், மார்க்ஸ்சிஸ்டுகளும், திமுகவை, பெரியாரிய இயக்கங்களையும் நட்பு சக்தியாக கருதுகிறார்கள். ஆனால், திமுக, திராவிட 2.0, பெரியாரிஸ்டுகள், ஐடி விங் கம்யூனிஸ்டுகளையும்,  அம்பேத்காரிஸ்டுகளையும் பகை சக்தியாக பார்க்கிறது. ரங்கராஜ் பாண்டேவை கொஞ்சுகிறது. கோபி நாயனார்களை வெறுக்கிறது.

கள  அரசியலில் திமுகவின் ஆளும் வர்க்க லட்சணம் ஊர் அறிந்த ஒன்றுதான். ஆனால், முற்போக்கு  சக்திகள் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக ஐடி விங்கின் இந்தப் போக்கு, திமுகவின் தேர்தல் அரசியலிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை திமுக தலைமை உணர வேண்டும்.

திமுகவுக்கு முட்டு கொடுப்பதே திகவின் பணி. ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம்  இருப்பது போல, இவர்களிடம் செயல்திட்டம் எதுவும் கிடையாது. பெரியாரின் பெயரால் பிழைப்பு நடத்துகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் நிலத்திற்காக குரல் கொடுத்து, பெரியாரின் தத்துவத்தை பேசுபவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ஒரே காரணத்திற்காக, கோபி நயினார் மீது அவதூறை வாரி இறைக்கும் திராவிட கும்பலே! உங்களுக்கும் சர்வாதிகார வர்க்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. திராவிடர் கழகம் என்றால் சமூக நீதி என்று நினைத்ததற்கு, இல்லை... திராவிடர் கழகம் என்றால் சமூக சீர்கேடு என்று காட்டிவிட்டீர்கள்'' என்று பொங்கி வருகிறார்கள்.
 

இதையும் படிங்க: திமுக மேடையில் ரங்கராஜ் பாண்டே எதற்கு? இவ்வளவு ஜனநாயகம் தேவையா..? சுப.வீ ஆதங்கம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share