×
 

பாஜகவுக்கு சப்போர்ட்டா.? இந்தா வாங்கிக்கோங்க... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை தூக்கியடித்த எடப்பாடி...! 

பாஜகவின் மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமாரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

பாஜகவின் மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமாரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

 மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியாக தெரிவித்து வருகிறது.  அதிமுகவும் இருமொழி கொள்கையை தங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாஜகவின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்டது பரபரப்பைக் கிளப்பியது.  

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சாங்கா அரணை பகுதியில் பாஜக சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.  பாஜக மாநில செயலாளர் ஆனந்த பிரியா தலைமையில் பாஜகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசங்களை வழங்கி ஆதரவு திட்டினர். மஞ்சகாலை பகுதியில் வசித்து வரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் அப்போது காரில் வந்தார். அப்போது அவரை வழிமறித்த பாஜக நிர்வாகிகள் சமக்கல்வி அனைவரது உரிமை என்றும் கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து எடுத்துரைத்ததோடு, அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதையும் படிங்க: அதிமுகவுக்குள் ஆட்டம் காட்டும் விஜய்..! தங்கமணி- எஸ்.பி.வேலுமணியுடன் மோதும் எடப்பாடியார்..!

தனியார் பள்ளிகளைப் போலவே அரசு பள்ளி மாணவர்களும் முன்று மொழிகளைக் கற்க ஆதரவு அளிக்கும் வகையில் தங்களது கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என வற்புறுத்தினர். இதையடுத்து,  அதிமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏமான விஜயகுமார் பாஜகவின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்டார். 

இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமாரை கட்சி மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் கொண்டு நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தின் உடன் பிறப்புகள் யாரும் இவருடன் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடியாருக்காக பாஜக தலைமையிடம் அண்ணாமலை போட்ட சபதம்... காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share