×
 

தேனியில் அரசு ஊழியர்கள் நூதனப் போராட்டம்.. முழு ஓய்வூதியத்தையும் வழங்க கோரிக்கை..!

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தற்போது நூதனம் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 

அரசு பணிகளில் 15 ஆண்டுகள் முடிந்து ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் முழு ஓய்வூதியமும் தானாக சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனியில் அரசு ஊழியர்கள் நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதுக்குறித்து, முன்னாள் முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முழு ஓய்வூதிய தொகையில் 33% மிகாமல் அரசுக்கு ஒப்படைப்பு செய்து அதற்கான மொத்த தொகையினை பெற்று கொள்வது வழக்கம்.

இதற்கு பதிலாக முழு ஓய்வூதிய தொகையில் 33 விழுக்காடு குறைக்கப்படும் இதனை குறை ஓய்வூதியம் என்று கூறுவர் இந்த குறை ஓய்வூதியம் 15 ஆண்டுகள் வழங்கப்படும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஓய்வூதியம் வழங்கப்படும். எனவே முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி 15 ஆண்டுகள் முடிந்த அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் முழு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வகையிலும், 80 வயது நிறைந்தவர்களுக்கு 20 விழுக்காடு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வகையிலும் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு அட்டை கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அறிவு நகரை.. சேலம், கோவை, மதுரைக்கு மாத்துங்க..! பாமக அன்புமணி அட்வைஸ்

இதுபோன்று எதிர்க்கட்சிகள் பலரும் இதே கோரிக்கையை வலியுறுத்திய நிலையில் திமுக அரசை பலரும் கேள்வி எழுப்பினர். திமுக அதன் தேர்தல் அறிக்கை 308ல் மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80 வயது நிறைந்தவுடன் 20 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்தை மாற்றி 70 வயது நிறையும் பொழுதே 10% விகிதமும் 80 வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவீதமும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.

அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுப்பணித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் என அலுவலர்கள் அனைவருமே நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அலுவலர்கள் அனைவருமே கருப்பு பட்டை அணிந்து கொண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் வீரபாண்டியில் உள்ள நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழா கூட்டத்தில் சங்கத்தினரிடம் கோரிக்கைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். முன்னதாக அரசு அலுவலர்கள் தங்கள் ஓய்வூதிய கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பாட்டை அணிந்து கொண்டே பணியில் ஈடுபட்டது மாவட்ட மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு திட்டமிட்படி நடைபெறும்.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share