இன்றும், நாளையும் அதிகரிக்கும் வெப்பநிலை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையானது உயிரைக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்து தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. மேலும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் மழை பெய்தாலும் வெப்பநிலையானது அதிகரித்தபடியே உள்ளது. அதனைத் தொடர்ந்து வெப்பநிலையானது இன்றும் நாளையும் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் அதே பகுதிகளில் வலு விழுந்தது. இருப்பினும் அதை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் ஏப்ரல் 11 12 அதாவது இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. ஏப்ரல் 12 வரை நீடிக்கும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
அதனைத் தொடர்ந்து 13-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும். இந்த நிலையில் 11 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை என்றாலும் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது சற்று உயரக்கூடும்.
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலையாக ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகமாக உயர கூடும். தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடை மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 ல் இருந்து 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. ஏப்.12 வரை மழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கை விடுத்த ஆய்வு மையம்..!