×
 

இந்து பெண்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு: சர்ச்சை கருத்தை வெளியிட்ட இந்து முன்னணி நிர்வாகி கைது! 

இந்து பெண்கள் மீது கருத்தடை திணிக்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் நெல்லை நெல்லை டவுன்சாலியர் தெருவை சார்ந்த கார்த்திகா என்ற  பெண்ணுக்கு  கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி அன்று ஆண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளனர் என்று இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் புகார் தெரிவித்தார். 

மேலும் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார். மேலும் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் கண்டன பதிவை வெளியிட்டு இருந்தார். 

அந்த கண்டன பதிவில், இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் ஜனத்தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் நெல்லை ஹை கிரவுண்டு போலீசார் வழக்கு ப்பதிவு செய்தனர். 

இதையும் படிங்க: ஜாதி அரசியலின் பெயரால் அமைதியை சீர்குலைக்க முயற்சி: பிரதமர் மோடி கடும் தாக்கு  

தொடர்ந்து இன்று நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த குற்றால நாதனை இன்ஸ்பெக்டர்கள் தில்லை நாகராஜன், ஹரிஹரன் ஆகியோர் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமான ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதும் பர்வேஷ் வர்மா: ஆம் ஆத்மியை முந்திய பாஜக... வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share