×
 

பாகிஸ்தானில் சீனர்கள் நடத்திய போலி கால் சென்டர்... ரெய்டின்போது உள்ளே புகுந்து மக்கள் வைத்த ட்விஸ்ட்..!

பாகிஸ்தானில் இதுபோன்ற பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரிதானவை அல்ல.

போலி கால் சென்டர் மீது நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரவாசிகள்  அந்த அலுவலகத்தில் இருந்த  லேப்டாப்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்களும், முதியவர்களுமாகச் சேர்ந்து லேப்டாப், மானிட்டர்கள், கீ போர்டுகள் ஆகியவற்றைப் பிடுங்கி எடுத்துச் சென்றனர்.

பாகிஸ்தானின், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு போலி கால் செண்டரில் நடத்தப்பட்ட சோதனையில், எதிர்பாராத விதமாக உள்ளூர்வாசிகள் அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் கையில் கிடைத்த அனைத்துப் பொருட்களையும் எடுத்துச் சென்றனர். எஃப்-11 பிரிவில் சீன நாட்டினரால் இயக்கப்படும் கால் செண்டரை மத்திய புலனாய்வு நிறுவனம் (எஃப்ஏ) சோதனை செய்த பின்னர் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த கால் செண்டர் நிறுவனம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனை நடத்த அதிகாரிகள் வளாகத்திற்குள் நுழைந்ததும், உள்ளூர் மக்களும் உள்ளே நுழைந்தனர்.

இதையும் படிங்க: அவுரங்கசீப்பை புனிதப்படுத்துபவர்கள் ‘துரோகிகள்’.. தீயில் நெய்வார்த்த மகாராஷ்டிரா துணை முதல்வர் பேச்சு..!

இளைஞர்கள், மற்றும் முதியவர்கள், மடிக்கணினிகள், டெஸ்க்டாப்கள், மானிட்டர்கள், கீபோர்டுகள் உட்பட அவர்களுக்கு கிடைத்த அனைத்துப் பொருட்களையும் எடுத்துச் செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவின. சிலர் அனைவருக்கும் இலவசம் என்பது போல மரச்சாமான்களையும் விட்டுவைக்கவில்லை.

இந்த வீடியோவை எக்ஸ்தளத்தில் பதிவிட்ட ஒருவர், "இஸ்லாமாபாத்தில் சீனர்களால் இயக்கப்படும் ஒரு கால் சென்டரை பாகிஸ்தானியர்கள் சூறையாடினர். புனித ரமலான் மாதத்தில் நூற்றுக்கணக்கான மடிக்கணினிகள், மின்னணு பாகங்கள், தளபாடங்கள், கட்லரிகள் திருடப்பட்டன" என எழுதியுள்ளார்.

"கிரிப்டோவில் முதலீடு செய்து விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என நினைக்கும் பாகிஸ்தான் மக்கள் தொழிலை ஆரம்ப்ப்பதை ஆபத்தானதாக கருதுகிறார்கள்" என ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர் எழுதினார், "அவர்கள் ஒரு கால் சென்டரை ஒரு தொண்டு நிறுவனமாக தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிகிறது. மடிக்கணினிகள் முதல் கட்லரி வரை அனைத்தும் போய்விட்டன.சீனா முழு பாகிஸ்தானையும் கொள்ளையடித்தது. பாகிஸ்தானியர்கள் சீனாவின் சில கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகளைக் கொள்ளையடித்தனர்" என்று தெரிவித்து வருகின்றனர்.

மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், உலகம் முழுவதிலுமிருந்து மக்களை மோசடி செய்வதாகவும் புகார் எழுந்ததால் கூஅந்த நிறுவனத்ட் சோதனை நடத்தப்பட்டது. சில சீன நாட்டவர்கள் உட்பட வெளிநாட்டினர் குழு ஒன்று இங்கு இந்த மோசடியை நடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இந்த சோதனையில் சில வெளிநாட்டினர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், சிலர் தப்பித்துச் சென்றுள்ளனர்.

Pakistanis have Looted Call Centre operated by Chinese in Islamabad; Hundreds of Laptop, electronic components along with furniture and cutlery stolen during holy month of Ramadan pic.twitter.com/z6vjwBRRsq

— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 17, 2025

 

பாகிஸ்தானில் இதுபோன்ற பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரிதானவை அல்ல. கடந்த செப்டம்பரில், கராச்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு வணிக வளாகத்தை நூற்றுக்கணக்கான மக்கள் தாக்கி, அந்த இடத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, ஆடைகளைத் திருடி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஊழியர்கள் எவ்வளவோ முயற்சித்த போதிலும், அவர்கள் வலுக்கட்டாயமாக கடைகளுக்குள் நுழைந்து, சிறிது நேரத்திலேயே எல்லாவற்றையும் எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: மக்களே புரிஞ்சிடுச்சா..! மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை.. மத்திய அரசு ஒப்புதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share