×
 

விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் இஸ்ரோ சாதனை: 4 நாட்களில் துளிர்த்த காராமணி விதைகள்

விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பு சோதனை முயற்சியில் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) .

விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், முளைவிட்ட காராமணி, விரைவில் மேலும் துளிர்விட்டு கூடுதல்இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் 7 நாட்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாள்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ அறிவித்து இருக்கிறது.

விண்வெளியில் வேளாண்மை செய்ய முடியுமா என்பதை ஆராயும் வகையிலும், வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சியாகவும் இந்த சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு முதல்கட்ட வெற்றி பெற்றிருப்பது சாதனையாகும்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் மீது அமெரிக்கர்களுக்கு இவ்வளவு பக்தியா ..நமசிவாய மந்திரத்தை பாடியவாறு சாமி தரிசனம் ..!

விண்வெளியில் செடி வளர்ப்புக்கான பரிசோதனை முயற்சி (CROPS)யாக, பிஎஸ்எல்வி-சி60 மூலம் ஏவப்பட்ட 24 செயற்கைக்கோள்களில் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளும் ஒன்று.

அதாவது, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் CROPS எனப்படும் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது. விண்வெளியில் அதன் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாள்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலயில், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காராமணி விதைகளைக் கொண்டிருக்கும் அந்த பெட்டகத்திலிருந்து ஒரு காராமணி விதை முளைவிட்டிருக்கும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆயவு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் டிசம்பர் 30ஆம் தேதி செலுத்தப்பட்டது.

இந்திய ஆய்வு மையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்படி, விண்ணுக்கு ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்து அனுப்பியிருக்கிறது.

இந்த முன்னேற்றம் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு குறிப்பாக நீண்ட கால பயணம் மற்றும் பிற கிரகங்களில் மனித இருப்பை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்தும் நம்பிக்கை கூறிய தாக்கங்களை கொண்டுள்ளது. 

தீவிர நிலைமைகளில் வளரும் தாவரங்களின் நம்பகத் தன்மையை நிரூபிப்பதன் மூலம் விண்வெளி வேளாண்மையில் முன்னேற்றங்களுக்கு இஸ்ரோ வழி வகுத்து வருகிறது. இஸ்ரோவின் இந்த வெற்றிக்கு மத்திய அமைச்சர் ஜிதேரேந்திர சிங் வரவேற்பு தெரிவித்திருக்கிறார் ‌.

இதையும் படிங்க: விழுப்புரம் சிறுமி உயிரிழப்பு...நிவாரணத்தை நிராகரித்த பெற்றோர் ..கை பிடித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் பொன்முடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share