இன்று முதல் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?
எம்.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு 56 ரூபாய் ராயல்டி தொகை இருந்தது. ஆனால் அதன் பிறகு ராயல்டி தொகை 90ஆக உயர்ந்தது. இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறு கனிம நிலவரி என்ற புதிய வரியை தமிழ்நாடு அரசு விதித்தது. அது மட்டுமன்றி வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு மீட்டர் என்ற அளவில் விதிக்கப்பட்ட ராயல்டியை தற்போது டன் என்ற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 90 ரூபாயாக இருந்த ராயல்டி தொகை தற்பொழுது 165ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கருங்கல் குவாரிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, மற்றும் எம். சேண்ட் (செயற்கை மணல்) போன்ற கட்டுமான பொருட்கள் மீதான நிலவரியை ரத்து செய்ய வேண்டும். ஜல்லி எம். சாண்ட் பொருட்கள் மீதான எடை அளவீட்டு முறையை கைவிட்டு மீண்டும் பழைய முறையான யூனிட் அளவீட்டு முறையையே நடைமுறைபடுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் உரிமையாளர் சங்க தலைவர் சின்னச்சாமி, தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அதுமட்டுமன்றி எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்றார் போல உற்பத்தி பொருட்களின் விலையை நிர்ணயித்து கொள்ள அரசு அனுமதி அடைத்துள்ளதாகவும் கூறினார். அந்த விலையை குறைப்பதற்கு சாத்தியமில்லை என்பதை நாங்கள் இப்போது உணர்ந்து கொண்டோம். அது அந்த விலையை எல்லாம் குறைப்பதற்கு உடனே பண்ண முடியாது. அதற்கு சிறிது காலவகாசம் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தார்கள்.
இதையும் படிங்க: ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு... கிரஷர் உரிமையாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை..!
அதே சமயத்திலே எந்த அளவுக்கு வரி உயர்வு அதிகமாக இருக்கிறதோ, அதுக்கு ஈடாக நாங்க விற்கக்கூடிய உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களுக்கு விலையை ஏற்றி விற்றுக்கொள்ளலாம் என்று அரசு அதிகாரிகளும் அமைச்சரும் அனுமதி கொடுத்துள்ளதால், இன்று முதல் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் போன்ற பொருட்களுக்கு எல்லாம் விலை உயர்ந்துள்ளது. இதனால் எம்சான்ட், ஜல்லி கற்கள், வி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
புதிய விலையேற்றத்தின்படி ஒரு யூனிட் ஜல்லி ரூ.1000 உயர்ந்து 5000க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல எம்சான்ட் விலை ஒரு யூனிட்ரூ.5000 விற்ற நிலையில் தற்பொழுது ரூ.6000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பி சாண்ட் விலை ரூ.1000 அதிகரித்து 7000க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சனிக்கிழமை நடைபெறுகிறது போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு.. வாடிகன் அறிவிப்பு..!