ரேபிடோ, ஊபர், ஓலா பைக் டாக்ஸிக்கு அதிரடி தடை..! ஆறு வார காலத்திற்குள் நிறுத்த வேண்டுமென கோர்ட்டு உத்தரவு..!
கர்நாடக மாநிலத்தில் ஓடும் அனைத்து பைக் டாக்ஸிகளுக்கும் 6 வார காலத்திற்குள் தடை விதித்து அந்த மாநில உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஓடும் அனைத்து பைக் டாக்ஸிகளுக்கும் 6 வார காலத்திற்குள் தடை விதித்து அந்த மாநில உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்லூரி செல்லும் ஆண்,பெண் மற்றும் அலுவலகம் செல்வோர் என பலரும் தற்போது பைக் டாக்ஸிகளை பயன்படுத்துவதை தினசரி வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் அவர்களுக்கு பேரிடியாக அமையும் வகையில் கர்நாடக நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.
பைக்டாக்ஸி நிறுவனங்களான ரேபிடோ,ஓலா, ஊபர் உள்ளிட்ட பல நிறுவனங்களின் சேவைகளை ஆறு வார காலத்திற்குள் நிறுத்தி வைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கமா.? பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் விளக்கம்!!
பைக் டாக்ஸிகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் முறைப்படுத்தப்படாமல் செயல்படுத்தப்படுவதால் முறையாக செயல்படும் டேக்ஸி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது, இதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பைக் டாக்சி ஓட்டுவதற்கான தேவையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்க கர்நாடக அரசுக்கு மூன்று மாத கால அவகாசமும் நீதிமன்றம் அளித்துள்ளது. இந்த தீர்ப்பு பைக் டாக்ஸி செயலியான ரேபிடோவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கின்றனர்,
மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு மூன்றின் கீழ் தேவையான விதிகளுடன் தொடர்புடைய வழிகாட்டுதல்களை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் மாநிலத்தில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் செயல்பட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பைக் டாக்ஸி ஒழுங்குமுறைப்படுத்த மாநில அரசுக்கும் கர்நாடக போக்குவரத்து துறைக்கும் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம் ஷாம் பிரசாத் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. பைக் டேக்ஸி நிறுவனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவையான அரசாங்க விதிமுறைகள் அமலுக்கு வரும் வரை பைக் டாக்ஸிகளை போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்யவோ அல்லது அத்தகைய சேவைகளுக்கான ஒப்பந்த வண்டி அனுமதிகளை வழங்குவோர் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட முடியாது எனவும் நீதிபதி பிரசாத் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் அருண்குமார் ஓலா டாக்ஸி நிறுவனம் ஏப்ரல் 2024 மட்டுமே பைக் டாக்ஸிகளை வழங்க தொடங்கியது என குறிப்பிட்டார். நீதிமன்றம் இதனை ஒப்புக்கொண்டாலும் அனைத்து மனுதாரர்களும் இந்த உத்தரவுக்கு தலைவணங்கி தங்கள் பைக் டாக்ஸிகளை ஆறு மாத காலத்திற்குள் நிறுத்தி வைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் தொடரும் அவலம்.. மீண்டும் ஒருவரை கடித்த ராட்வீலர்.. என்னாச்சு மாநகராட்சி உத்தரவு?