4 பேரை பலி வாங்கிய ஏணி... சோகத்தில் முடிந்த விழா!!
கன்னியாகுமரியில் தேவாலய விழாவின் போது மின்கம்பத்தில் ஏணி உரசிய விபத்தில் 4பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை என்ற கடற்கரை கிராமத்தில் ஆலய திருவிழா நடைபெற்றது. இதனை ஒட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஆலய விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தேவாலயத்தின் முன்பு பெரிய அளவில் அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது சிலர் இரும்பு ஏணி ஒன்றை எடுத்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மின்கம்பம் மீது ஏணி உரசியது. அதில் இருந்து மின்சாரம் அங்கிருந்தவர்களின் மீது பாய்ந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் 4பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: எங்கு திரும்பினாலும் அலறல் சத்தம்.. அடுத்தடுத்து மோதிக்கொண்ட ஆம்னி பேருந்துகள்..!!
போலீசார் விசாரணையில் ஆலய விபத்தில் இறந்தவர்கள் பின்றோ, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் என்பது தெரிய வந்தது. ஆலயத்தின் விழா ஏற்பாட்டில் 4பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிகாலையில் நிகழ்ந்த கொடூர விபத்து.. 5 பேர் பலி.. பேருந்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்..!