×
 

டெல்லி பெண்களே தயாரா இருங்க! மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியானது…

டெல்லியில் மகளிர் உரிமைத் தொகைக்கு முன்பதிவு செய்யும் பணிகள் மார்ச் 8ஆம் தேதி தொடங்க உள்ளன.

டெல்லியில் மகளிர் உரிமைத் தொகைக்காக மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க நாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதல் முன்னுரிமை என்று தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

டெல்லியின் 9வது முதல்வர் மற்றும் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தா 1974-ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள நந்தகர் எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை வங்கி அதிகாரியாக இருந்தவர்.

இதையும் படிங்க: அரசியல் எதிரி சரத் பவாருக்கு சேரை பிடித்து அமர வைத்த மோடி..! பாட்டிலில் இருந்து தண்ணீரையும் ஊற்றிக் கொடுத்தார்..!

சமீபத்தில், டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ரேகா குப்தா.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கொடுத்த, முக்கிய வாக்குறுதியான மகிளா சம்ருதி யோஜனாவின் மகளிருக்கு 2500 ரூபாய் உதவித்தொகை அளிக்கும் திட்டத்திற்காக மார்ச் எட்டாம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமைச்சர் மனோஜ் திவாரி கூறுகையில், மார்ச் எட்டாம் தேதி முதல் யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதை வகைப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் பயனாளிகள் தேர்வு குறித்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும் இந்த முன்பதிவு பணிகள் முடிக்க ஒரு மாத காலம் ஆகும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மினி இந்தியா'-வாக மாறுகிறது டெல்லி... பாஜக போட்ட பக்கா ப்ளான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share