×
 

கும்பமேளாவில் பர்ஸை தொலைத்தவர் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதன் ரகசியம் என்ன?

கும்பமேளாவுக்கு புனித நீராட வந்தவர் பர்ஸைத் தொலைத்தபின் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் தொடங்கி, லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்துக்களின் மகா கும்பமேளா புனித திருவிழா உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இங்குள்ள கங்கை,யமுனை நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், அகோரிகள் புனித நீராடுகிறார்கள். 
கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் இதுவரை திரிவேணி சங்கமத்தில் 55.50 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் விரிந்தாவன் நகரைச் சேர்ந்த ஒருவர் கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக பயணித்தார். அந்த நபர் பிரயாக்ராஜ் நகரில் பேருந்தில் வந்து இறங்கியபோதுதான் அவரின் பர்ஸை யாரோ திருடிவிட்டார்கள் என தெரிந்தது.

அந்த பர்ஸில் ஆதார் கார்டு, பான் கார்டு, உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், வங்கி டெபிட் கார்டு ஆகியவை இருந்தன. அனைத்து ஆவணங்கள் அடங்கிய பர்ஸை யாரோ திருடிவிட்டார்கள் என்று நினைத்து அந்த நபர் வருத்தத்தில் இருந்தார். தன்னுடைய சட்டைப் பையில் இருந்த சிறிது பணத்தை வைத்து ஊருக்குச் செல்வதும் சாத்தியமில்லை என அந்த நபர் உணர்ந்தார். இதையடுத்து, ஊருக்கு தொலைத்த பணத்தைவிட கூடுதலான பணத்துடன் செல்ல முடிவு செய்தார். இதையடுத்து, தன்னிடம் இருந்த சிறிது பணத்தை வைத்து கும்பமேளா பகுதியில் சிறிய தேநீர் கடை ஒன்றை அந்த நபர் தொடங்கினார். ஆனால், வியப்பு என்னவென்றால், அந்த நபர் நினைத்ததைவிட தேநீர் வியாபாரம் படுசூப்பராக நடக்கவே தினசரி ரூ.2ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம்வரை லாபம் கிடைத்தது.

இதையும் படிங்க: பிரயாக்ராஜ் கங்கை நதியில் கலந்துள்ள ஃபாகல் பாக்டீரியா? மனிதர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

கூட்டம் அதிகமான காலங்களில் கூடுதல் நேரம் தேநீர்விற்பனை செய்தபோது அந்த நபருக்கு ரூ.50ஆயிரம் லாபம் கிடைத்தது. இதுபோன்ற பணத்தை மொத்தமாக லாபமாகப் பார்த்ததை அந்த நபர் நம்பவில்லை.
இருப்பினும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து தேநீர் விற்பனை செய்யத் தொடங்கினார், தினசரி ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை லாபம் கிடைத்தது. இது குறித்து அந்த நபர் டிவி9 சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ என் பெயர் சுபம் பிராஜாபத் கும்பமேளாவுக்கு புனித நீராட விருந்தாவன் நகரில் இருந்து வந்தேன். இங்கு வந்தபின்புதான் என்னுடைய பர்ஸை நான் தொலைத்துவிட்டேனா அல்லது திருடிவிட்டார்களா எனத் தெரியவந்தது. ஊருக்குச் செல்லவும் என்னிடம் பணம் போதுமானதாக இல்லை.

என்னிடம் இருந்த பணத்தை வைத்து சிறிய தேநீர் கடை நடத்தினேன். இரவுபகல் பாராமல் பக்தர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தேநீர் விற்பனை செய்ததால், எனக்கு தினசரி ரூ.3 ஆயிரம் முதல் ரூ5 ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது. இன்று பிரயாக்ராஜ் நகரில் என்னுடைய தேநீர் கடை சிறப்பாக நடந்து வருகிறது. இன்று தினசரி எனக்கு ரூ.5 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. கும்பமேளாவுக்கு சிறிதளவு பணத்துடன் வந்தேன். ஆனால் திரும்பி ஊருக்குச் செல்லும்போது பல லட்சங்களுடன் செல்வேன்.” எனத் தெரிவித்தார். பிரஜாபத் தன்னுடைய முயற்சியால் சிறிய தேநீர் கடை நடத்தி, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதை சமூகவலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள், அவரின் தொழில்முனைவோர் திறனையும் கண்டு வியக்கிறார்கள். சிலரோ பிரஜாபத்தை கிண்டல் செய்தும், அவரை வைத்து மீம்ஸ் உருவாக்கியும் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கைதிகளையும் புனித நீராட வைக்கும் உ.பி. அரசு! கும்பமேளா நீரை 68 சிறைகளுக்கு அனுப்ப முடிவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share