#BREAKING சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து... மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்...!
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சர்ச்சை கருத்துக்களை கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக H.S.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமனம்.
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சர்ச்சை கருத்துக்களை கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக H.S.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறுமி மீது தவறு இருப்பதாக மகா பாரதி கூறிய கருத்து சர்ச்சையானது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாபாரதியை இட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆட்சியர் சர்ச்சை கருத்து:
சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி 16 சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சிறுவனின் முகத்தில் துப்பி அந்த குழந்தையே தவறாக நடந்துகொண்டதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.
அப்போது, சீர்காழியில் கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியபோது, இந்த சம்பவத்தில் குழந்தையே தப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. அதுதான் காரணம்.
எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும் என சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசினார். மூன்றரை வயது சிறுமி சிறுவனின் முகத்தில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை கண்டனம்:
சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்குதமிழக பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்.
விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்? என்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.
மகாபாரதி இடமாற்றம்:
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறுமி மீது தவறு இருப்பதாக மகா பாரதி கூறிய கருத்து சர்ச்சையானது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாபாரதியை இட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING போலீஸ் போட்ட திடீர் உத்தரவு... சீமான் கார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தம்... காரணம் என்ன?