அண்ணாமலையின் ஆட்களை தூக்கும் நயினார்... வந்த உடனே வேட்டை ஆரம்பம்!!
தமிழக பாஜகவின் தலைவராகியிருக்கும் நயினார் நாகேந்திரன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக தலைமையிலான திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டு எஞ்சியிருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து தமிழக பாஜகவின் தலைவராகியிருக்கும் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளார்.
அதன்படி, நேற்று சென்னையில் இருந்து அவரது பயணம் தொடங்கியுள்ளது. இதனிடையே பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தலைவராக யார் வந்தாலும் அவர்கள் தனக்கு ஏற்ற நிர்வாகிகளை நியமிப்பது வழக்கமான ஒன்று. பழைய தலைவர் நியமித்த நிர்வாகிகளை மாற்றுவதும் புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் வழக்கம்.
இதையும் படிங்க: இந்து கோயில்களின் புனிதத்தை இப்படி கெடுக்கனுமா? - நயினார் நாகேந்திரன் காட்டம்!
அந்த வகையில் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணாமலைக்காக பணியாற்றிய நிர்வாகிகள், கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத நிர்வாகிகள் என அனைவரையும் கூண்டோடு தூக்க நயினார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஜாதி ரீதியாக பரவலாக பல தரப்பினருக்கு பதவி வழங்கவும் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாதாக அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க மறுபுறம் 2026 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளதாகவும் இதனால் கட்சியில் நிர்வாகிகள் குழு, மாவட்ட தலைவர்கள் குழு விரைவில் கூண்டோடு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனை வரும் மே மாத இறுதிக்குள் செய்து முடிக்க நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் அரசியல் புரியவில்லை… நயினார் நாகேந்திரன் வெட்கப்பட வேண்டாமா?: ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!