×
 

நேஷனல் ஹரால்டு வழக்கு: காங்கிரசின் ஏஜேஎல் சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்..!

நேஷனல் ஹெரால்டு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அசோசியேட் ஜர்னல் லிமிட்டட் சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய நகரங்களில் அசோசியேட் ஜர்னல் லிமிட்டட் சொத்துக்களை முடக்க அந்த நகர பதிவாளர்களுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள ஜிண்டால் சவுத்வெஸ்ட் ப்ராஜெக்ட் லிமிட்டெட் நிறுவனம் மாத வாடகையை அமலாக்கப்பிரிவு கணக்கிற்கு மாற்றவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை கிழக்கில் பாந்த்ராவில் உள்ள சொத்துக்கள், டெல்லியில் உள்ள பகதூர்ஷா ஜாபர் மார்க், லக்னெளவில் உள்ள பிசேஸ்வர் நாத் சாலைப்பகுதியில் உள்ள சொத்துக்களை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தின் 8-வது விதி, விதி 5(1) சொத்துக்களை முடக்கம் விதி ஆகியவற்றின் கீழ் சொத்துக்களை முடக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம்.. குஜராத்தில் 8,9 தேதிகளில் நடக்கிறது..!

ஜின்டால் சவுத்வெஸ்ட் ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் “இந்த பாந்த்ரா வளாகத்தில் உள்ள 7வது, 8-வது மற்றும் 9வது தளத்தின் மாத வாடகை தொகையை அமலாக்கப்பிரிவு கணக்கிற்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு கடந்த 2014, ஜூன் 26ம் தேதி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியால் பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை குறைந்த விலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வாங்கியுள்ளனர் என புகார் அளித்தார். இந்த வழக்கில் விசாரணை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, மறைந்த தலைவர் மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா, யங் இந்தியா எனும் தனியார் நிறுவனம் ஆகியவை சேர்ந்து, அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை சந்தை விலைக்கும் குறைவாக வாங்கி மோசடி செய்துள்ளனர். இது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டத்தின் தவறாகும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதப்பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக என விசாரித்து வருகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விசாரணையை அமலாக்கப்பிரிவு நடத்தியுள்ளது.

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் ரூ.50 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக அமாலக்கப்பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: ஊடகத்தை சந்திக்க மோடிக்கு தைரியம் இல்ல ! பிரதமரை லெப்ட் ரைட் வாங்கிய காங்கிரஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share