×
 

தேர்தல் ஆணையர் அல்ல, முஸ்லிம் ஆணையர்.. தொடரும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் ஆணவப் பேச்சு..!

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தேர்தல் ஆணையர் அல்ல, அவர் முஸ்லிம் ஆணையர் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தேர்தல் ஆணையர் அல்ல, அவர் முஸ்லிம் ஆணையராகத்தான் நடந்து கொண்டார் என பாஜக எம்பி. நிஷிகாந்த் துபே காட்டமாக விமர்சித்துள்ளார். உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இருவரையும் கடுமையாக விமர்சித்து நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையரையும் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு சட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி சமூக வலைத்தளத்தில் “வக்ஃபு சட்டம் சந்தேகத்துக்கு இடமின்றி முஸ்லிம்களின் இடத்தைக் கைப்பற்ற மத்திய அரசின் கொடூரமானத் திட்டம். நிச்சியமாக இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் கண்டிக்கும் என்று நான் நம்புகிறேன். விஷமத்தனமான பிரச்சாரத்தின் தவறான தகவல் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ‘உச்ச நீதிமன்றமே சட்டம் இயற்றினால், நாடாளுமன்றம் எதுக்கு இழுத்து மூடுங்க’.. பாஜக எம்.பி. கடும் விமர்சனம்..!

முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி கருத்துக்கு பதில் அளித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே “குரேஷி பதவிக்காலத்தில் தேர்தல் ஆணையராக செயல்படவில்லை, மாறாக முஸ்லிம் ஆணையராகத்தான் செயல்பட்டார். இவரின் பதவிக்காலத்தில்தான் ஜார்க்கண்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்கு சந்தல்பர்கானாவில் வாக்குரிமை வழங்கப்பட்டது. 712 ஆம் ஆண்டு நபிகள் நாயகத்தின் இஸ்லாம் இந்தியாவிற்கு வந்தது.

அதற்கு முன்பு இந்த நிலம் இந்துக்கள் அல்லது பழங்குடியினர், சமணர்கள், பெளத்தவர்களுக்கு சொந்தமானது. 1189 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியால் எனது கிராமம் விக்ரம்ஷிலா எரிக்கப்பட்டது, விக்ரம்ஷிலா பல்கலைக்கழகம்தான் உலகிற்கு முதல் துணைவேந்தரை அதிஷ் திபங்கரை வழங்கியது” எனத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றமே சட்டம் இயற்றினால் நாடாளுமன்றம் எதற்காக இருக்கிறது அதை இழுத்து மூடுங்கள். தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் அனைத்து சிவில்போர்களுக்கும், மதச் சண்டைகளுக்கும் காரணம் என்று ஜார்க்கண்ட் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையாக உச்ச நீதிமன்றத்தை விமர்சித்தார். ஆனால் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்து, பாஜகவுக்கும் இவர்களின் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஒதுங்கிக்கொண்டார். 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக தலைவர்கள் மீது ஏன் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
 

இதையும் படிங்க: கடலூரில் பயங்கரம்; பைக்கில் சென்றவருக்கு இப்படியொரு நிலையா? அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share