×
 

ஊராட்சி தலைவர் வீடு உட்பட 9 வீடுகளை இடிப்பு.. நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகளை தகர்த்து அகற்றி அதிரடி காட்டிய அதிகாரிகள்..

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாம்பரம் அருகே அரசுக்கு சொந்தமான  நிலங்களில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தாம்பரத்தை சுற்றியுள்ள வேங்கை வாசல், அகரம் தென், மப்பேடு, கிளாம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் என பல்வேறு பகுதிகளில் சாலை வழி நிலங்கள், நீர்வழிப் பாதைகள், ஓடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அவ்வப்போது அரசுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள அகரம் தென் ஊராட்சி பகுதியில் அரசு புஞ்சை, தரிசு நிலங்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனை எடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய்த்துறை மற்றும் போலீசார் உதவியுடன் சமூக இடத்திற்கு சென்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் வெளிவந்த அறிவிப்பு.. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலனை.. அதிகாரிகளை குஷி படுத்திய தமிழக அரசு..

இந்த ஆக்கிரமிப்பு இடத்தில்  அகரம் தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் வீடு உட்பட ஒன்பது வீடுகளும் மூன்று கடைகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் அகற்ற முயன்ற போது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்துள்ளனர்.

இதற்கிடையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதால் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் வளர்த்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர். இதனை அடுத்து ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டது. அதன் பிறகு பொருட்களை எடுத்துச் செல்ல  அவகாசம் கொடுக்கப்பட்டு மாலையில் முழுமையாக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

முன்னதாக அதிகாரிகளுக்கும் ஊராட்சி தலைவர் இன் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பகுதி முழுவதும் பரபரப்பானது போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் செயலில் ஈடுபட்டனர். தொடர்ந்து யாரும் செல்ல முடியாத வகையில் போலீசார் ஆக்கிரமிப்புகளுக்கு தடுப்புகள் அனைத்தனர். மேலும் மற்றும் மூன்று வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது.

இதையும் படிங்க: 200 இந்தியர்களை நாடு கடத்திய டிரம்ப் அரசு..! இந்தியா புறப்பட்டது அமெரிக்க ராணுவ விமானம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share