உதயநிதி துணை முதல்வராகும் போது... விஜய் முதல்வராக கூடாதா? - நடிகர் ரவிச்சந்திரன் ஆவேசம்!
புதிதாக கட்சி தொடங்கிய சிலர் உழைக்காமலேயே ஆட்சிக்கு வர துடிப்பதாக தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகரான ரவிச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
புதிதாக கட்சி தொடங்கிய சிலர் உழைக்காமலேயே ஆட்சிக்கு வர துடிப்பதாக தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகரான ரவிச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றைக்குச் சில கட்சிகளைப் பார்க்கிறோம். தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் அது யார்? எப்படிப்பட்டவர்? எந்தக் கட்சி? எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை” என்றார். பெரும்பாலானோர் முதல்வர் சீமானை விமர்சிப்பதாகக்கூறினாலும், அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் விஜய்க்கும் பொருந்தும் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதுதொடர்பாக சோசியல் மீடியாக்களில் தவெக மற்றும் திமுகவினர் இடையே வார்த்தை போர் வெடித்துள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான நடிகர் ரவிச்சந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர், ஏன் உங்கள் மகன் வந்து கட்சியில் சேர்ந்ததுமே மாநில இளைஞரணித் தலைவர் பதவி தருவீர்கள், அடுத்து மூன்றே மாதத்தில் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பீர்கள், எம்.எல்.ஏ.வான மூணு மாதத்தில் அமைச்சர் பதவி கொடுப்பீர்கள், அமைச்சரான நான்கே மாதத்தில் துணை முதல்வர் பதவி தருவீர்கள். உங்களுடைய மகன் என்றால், வந்ததுமே உச்சத்திற்கு போக வேண்டும். ஆனால் மக்களை மகிழ்வித்த ஒரு கலைஞன், தனது அடுத்த 20 ஆண்டு கால சினிமா வாழ்க்கை துறந்து, கட்சி ஆரம்பித்து அடிப்படையில் இருந்து கஷ்டப்பட்டு ஆட்சி அமைக்க ஏன் ஆசைபடக்கூடாது. மக்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கை வைத்து விஜய் அப்படி கூறியுள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைகிறாரா ஆதவ் அர்ஜுன்?...வேங்கை வயல் பிரச்சனையை தொட்டதால் பாயும் பொய் பிரச்சாரம்?
நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள் என்கிறீர்களே, உங்கள் மகனும் நேற்று தானே கட்சிக்குள் வந்தார். அவர் உடனே துணை முதல்வர் ஆகும்போது, விஜய் ஆசைப்படுவதில் என்ன தவறு உள்ளது என ஆவேசமாக பேசியுள்ளார்.
உதயநிதியை வச்சு செய்த அய்யா ரவிசந்திரன்🔥@PriyankaSmile01 @tvkvijay_4tn @sangeet29332013 @YourNanban @Bloody_Expiry @rajakumaari @ramk8060 @Ibrahim_0369 @SavukkuOfficial #தமிழகவெற்றிக்கழகம் #TVK #Tvkvijayhq pic.twitter.com/GhIeSWhwDd
— Abdul TVK (@abdulvijayrasig) January 26, 2025
இதையும் படிங்க: 2 நாளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் விஜய்...புகார் பட்டியலுடன் வரும் நிர்வாகிகள்...