போக்சோ வழக்கில் கைதான கைதி பலி.. மத்திய சிறையில் சலசலப்பு..
கோவையில் போக்சோ வழக்கில் கைதான இளைஞர் மர்மமான முறையில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள மத்திய சிறையில் பெரும்பான்மையாக ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சோலைமேடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் குழந்தை திருமணம் தொடர்பான வழக்கில் போக்ச சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் தங்கராஜ் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சிறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் ராகிங்..! 3 ஆண்டுகளில் 51 பேர் மரணம்.. தேசிய அளவில் வெளியான புள்ளி விவரம்..!
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு தங்கராஜ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை எடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரை இந்த மத்திய சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய சிறை அதிகாரி சரவணா குமார் புகார் அளித்த நிலையில், காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். முன்னதாக கோவை அரசு மருத்துவமனையிலேயே தங்கராஜின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈஸியா வருமான வரி ரிட்டனை எப்படி தாக்கல் செய்யலாம்..?