கன்னியாகுமரி மக்களே உசார்.. நாளையிலிருந்து புதிய ரூட்.. அறிவிப்பு வெளியிட்ட எஸ்.ஐ.,
கன்னியாகுமரி மயிலாடி கூண்டு பாலத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நாளை தொடங்க இருப்பதனால் நாளை முதல் ஒரு மாதத்திற்கு அவ் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் ஆய்வாளர் அருண் தெரிவித்துள்ளார்.
மயிலாடி கூண்டு பாலத்தின் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணிகள் நாளை முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவான விளக்கங்களுடன் கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் ஆய்வாளர் அருண் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மயிலாடி கூண்டு பாலத்தின் கீழ் ரூபாய் 40 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி ஏழாம் தேதி காலை தொடங்குகிறது.
தொடர்ந்து ஒரு மாத காலம் பணி நடைபெற உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் சுசீந்திரம், வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக அஞ்சு கிராமம் செல்லும் அனைத்து வாகனங்களும் சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, பொற்றையடி வழியாக பெரிய விலை வழியாக பால்குளம் ரோடு சென்று அஞ்சு கிராமம் செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா... 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊரில்...!
அதேபோல அஞ்சு கிராமத்திலிருந்து மயிலாடி, வழுக்கம்பாறை வழியாக சுசீந்திரம் செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னார் குளம் சந்திப்பில் இருந்து பொட்டல் குளம் சந்திப்பு வழியாக நேராக சென்று பெரியவிளை, பெருமாள் புறம் வழியாக கொட்டாராம் சென்று சுசீந்திரம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளை பொருத்தமட்டில் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம், வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக அஞ்சு கிராமம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் சுசீந்திரம், வழுக்கம்பாறை வழியாக மயிலாடி ஆராட்டு பாலத்தில் இருந்து பொற்றையடி, கொட்டாரம், பெரியவிளை, பொட்டல் குளம், புன்னார்குளம் வழியாக அஞ்சு கிராமம் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை தரதரவென இழுத்துச் சென்ற புது மாப்பிள்ளை.. போலீசார் புகட்டிய பாடம்..