#BREAKING: விவா ஐல் பாபா..! போப் பிரான்சிஸ் தோன்றி மக்களை ஆசீர்வதித்தார்..!
நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று அவர் சொன்னபோது, அவர் மீண்டு வந்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்''
நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மெல்ல மீண்டு வந்து, சற்று முன் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையின் பால்கனியில் தோன்றிய போப் பிரான்சிஸ், ஐந்து வாரங்கள் கழித்து தன்னை பார்த்து ஆராவாரம் செய்த கூட்டத்தை ஆசீர்வதித்தார். 88 வயதான போப், "விவா இல் பாபா!" என்று கோஷமிட்ட நூற்றுக்கணக்கானவர்களை காண வெளியே தோன்றினார். இன்று பிற்பகுதியில் வெளியே தோன்றிய அவர், 38 நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பிப்ரவரி 14 அன்று மோசமடைந்த மூச்சுக்குழாய் அழற்சியுடன் அனுமதிக்கப்பட்ட பிரான்சிஸின் நிலை சிக்கலான சுவாச தொற்று, இரட்டை நிமோனியாவாக மோசமடைந்தது. இது அவரது நாள்பட்ட நுரையீரல் நோய், முந்தைய நுரையீரல் அறுவை சிகிச்சையால் சிக்கலானது. "அவர் உயிர் பிழைக்கமாட்டார் என்றே பலரும் நினைத்து கவலை கொண்டனர்.
இதையும் படிங்க: போப் ஆண்டவருக்கு புதிய சுவாச கோளாறு... முக கவசத்துடன் செயற்கை சுவாசம்..!
ஜெமெல்லியின் மருத்துவத் தலைவரான டாக்டர் செர்ஜியோ அல்ஃபியேரி, ''போப் பிரான்சிஸின் மீண்டுவந்தது பாராட்டத்தக்கது. இதுபோன்ற கடுமையான தொற்றில் அனைவரும் தப்பிப்பிழைக்கவில்லை'' என்பதைக் குறிப்பிட்டார். "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என்று அவர் சொன்னபோது, அவர் மீண்டு வந்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்'' என்று அல்ஃபியேரி பகிர்ந்து கொண்டார்.
இருந்தபோதும் போப்பின் குரல் நுரையீரல் பாதிப்பால் பலவீனமாகவே உள்ளது. பூஞ்சை தொற்றுக்கான வாய்வழி மருந்துகள் மற்றும் பிசியோதெரபியுடன் அவரது சிகிச்சை தொடர்கிறது. வாடிகனின் டோமஸ் சாண்டா மார்ட்டாவில் அவருக்கு கூடுதல் ஆக்ஸிஜன் காத்திருக்கிறது.
ஈஸ்டர் சேவைகள், ஏப்ரல் 8 ஆம் தேதி மன்னர் சார்லஸ் III உடனான சந்திப்பு உட்பட எந்த உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், வாடிகனில் இரண்டு மாத ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுதி உள்ளனர். 2025 புனித ஆண்டு யாத்ரீகர்களை ரோமுக்கு ஈர்க்கும் நிலையில், பிரான்சிஸ் மீண்டு வந்துள்ளது அவரது விசுவாசிகளுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. அவர்கள் நெகிழ்ச்சியாக போப் ஆண்டவருக்காக ஆவலுடன் ஜெபித்தார்கள்.
இதையும் படிங்க: போப் ஆண்டவர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம்: முன் கணிப்பை வெளியிடாமல் தவிர்க்கும் மருத்துவர்கள்