இடப்பற்றாக்குறையால் பூங்கா அமைப்பதில் சிக்கல்.. கடையடைப்பு போராட்டத்தில் குதித்த மக்கள்..!
நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் மத்திய அரசு அறிவித்த பூங்காவை இடமாற்றம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் வருமானங்களில் பிரதானமாக சுற்றுலா துறையும் பங்காற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் சுற்றுலா துறையை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தும் நோக்கத்துடன், பிரதமர் மோடி கடந்த ஆண்டு இந்தியாவில் 10 இடங்களில் புதிய பூங்காக்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதில் தமிழகத்தில் மாமல்லபுரம் பகுதியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா மற்றும் பந்தலூர் அருகே தேவாலா பொன்னூர் பகுதியில் அமைந்துள்ள தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டிற்கு என மொத்தம் 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் பொன்னூர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லை என்பதனால் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதை கூறி இந்த திட்டமானது இடம் மாற்றப்பட்டது. புதிதாக வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதை கூறி இந்த திட்டத்தை அயன் கோலி அருகே கள்ளிக்காச்சால் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்தது
இதையும் படிங்க: லாபத்தில் பிஎஸ்என்எல்! 17 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக ரூ.262 கோடி..!
இதையும் படிங்க: ‘மக்களுக்கு பிச்சையெடுக்கிற பழக்கம் அதிகமாயிருச்சு’! சர்ச்சையில் பாஜக முன்னாள் அமைச்சர்