வானிலை அலர்ட்..! 17ஆம் தேதி வரை தமிழகத்தில் வெளுக்கப்பொகும் மழை..!
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை,மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும்,. ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: 7 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை..! வானிலை மையத்தின் புது அப்டேட்..!
இதனிடையே , தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சென்னை கத்திவாக்கத்தில், 6 செ.மீ., மழையும் எண்ணுாரில், 4 செ.மீ., மழையும் பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், வேலுார் ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
சென்னை மாதவரம், அம்பத்துார், மணலி புதுநகர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, வேலுார் மாவட்டம் காட்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் ஆகிய இடங்களில் தலா, 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: 16 மாவட்டங்களில் டார்கெட்... அடித்துப் பொளக்கப்போகும் மழை...!