×
 

சீமான் ஒரு வக்கிரவாதி... காங்கிரஸ் எம். பி.சுதா கடும் தாக்கு!

சீமானை ஆதரிக்கும் பிள்ளைகளை அவரது பிடியில் இருந்து மீட்பது நாட்டுக்கு நல்லது என காங்கிரஸ் எம். பி.சுதா தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக நேற்று இரவு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். இந்த நிலையில் பாலியல் புகார் குறித்து கொச்சையான கருத்துக்களை கூறிய சீமானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மயிலாடுதுறை காங்கிரஸ் எம். பி.சுதா தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ள அவர், தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரீகமான மனிதர் என்பதை மீண்டும் ஒருமுறை சீமான் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அயோக்கியர்கள் கூட பேச தயங்கும் வார்த்தைகளை சிறிதும் கூச்சமின்றி சீமான் பேசியிருப்பதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: 'திமுகவில் ஒரு தலைவனுக்காவது இதைப் பேச தகுதி இருக்கான்னு சொல்லுடா..?-- சீமான் ஆத்திரம்..!

முதலில் இந்த வழக்கு அரசியல் ரீதியான வழக்கு என்பதே பொய். சீமான் மீது ஒரு நடிகை புகார் தருகிறார்., நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் உள்ளது, சீமானே நீதிமன்றம் சென்ற நிலையில் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி 12 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். தற்போது நீதிபதிக்கும் உள்நோக்கம் கற்பித்து கொண்டிருக்கிறார் சீமான் என்று கூறியுள்ளார். சாமானிய மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றங்களும் நீதிபதிகளும் தான்., அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து சீமான் எதை சாதிக்க போகிறார் என கேள்வி எழுப்பி உள்ளார். 

வயதிற்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பேசுவது வக்ர புத்தி இயல்பான ஒன்றாக மாற்றுவதாக அமைந்துவிடும் என்றும் பெண்மையை கொச்சைப்படுத்தும் சீமானை தமிழ் சமூகத்தில் இடம் கொடுக்காமல் விரட்ட வேண்டும் என்றும் சாடியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள், அந்தக் கட்சியை ஆதரிக்கும் பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும் எனக் கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: வக்கிரவாதி சீமானுக்கு இனியும் வக்காலத்து வாங்குவீங்களா?... நாதக பெண் நிர்வாகிகளை உசுப்பேற்றும் சுதா எம்.பி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share