×
 

சின்னதுரை மீதான தாக்குதல்..! பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

நெல்லையில் மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சமூகத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர். தற்போது சின்னதுரை கல்லூரி படித்து வரும் நிலையில், மீண்டும் அவர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்து சின்னதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் மாணவன் சின்னதுரை மீது 5 பேர் கொண்ட கும்பல் ஆன்லைன் செயலி மூலம் பழகி ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவைத்து மீண்டும் தாக்கப்பட்ட செய்தி வன்மையாக கண்டிக்கதக்கது என கூறினார்.

இதையும் படிங்க: 2026இல் துணை முதல்வரா.? பதறிபோய் செல்வபெருந்தகை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்.!

பள்ளி மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவது எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது என கூறிய அவர்,அதேநேரம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: செல்வப்பெருந்தகையுடன் கூட்டு..? சவுக்கு மேட்டரின் பரபரப்பு ஆடியோ..! சேகர்பாபுவிடம் பேசிய ரௌடி எங்கே..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share