×
 

பவன் கல்யாணின் பக்கத்தில் நின்றே பாதுகாப்பு... பவர் ஸ்டாரையே பதற வைத்த போலி ஐபிஎஸ்..!

பவன் கல்யாண், பார்வதிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மிகவும் ஆபத்தான, சமூக விரோதமான செயல் ஒன்று நடந்ததுதான் ஆச்சர்யம்..

ஆந்திராவில் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் பவன் கல்யாண். கூட்டணி கட்சி தலைவரையே விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்துபவர். திருப்பதி லட்டு விஷயத்தில் புரட்சி போராட்டங்களை நடத்தியவர். ஆனால், அவருக்கே  ‘அல்வா’ கொடுத்துள்ளார் ஓர் ஆசாமி என்பதுதான் அதிர்ச்சித் தகவல்.

2024ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரையுலக பிரபலங்களில் 2ம் இடத்தில் இருக்கிறார் தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண். ஆந்திர சட்டசபை தேர்தலில் அவரது கட்சி ஜனசேனா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்- பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பவன் கல்யாண் துணை முதல்வரானார். 

பவன் கல்யாணுக்கு ஆந்திர அரசு உயரடுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது தெரிந்ததே. தற்போது அவருக்கு உள்துறை, உளவுத்துறை மூலம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தும், கடந்த வாரம் பவன் கல்யாண், பார்வதிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மிகவும் ஆபத்தான, சமூக விரோதமான செயல் ஒன்று நடந்ததுதான் ஆச்சர்யம்..

இதையும் படிங்க: ‘அழிவும் நானே... ஆக்கமும் நானே...’மன்மோகன் சிங்கால் காங்கிரஸ் பெற்றதும்... இழந்ததும்... மீளாத சோனியா குடும்பம்..!

பவன் கல்யாண் இந்தப்பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது, அவருக்கு அருகில் ஐபிஎஸ் அதிகாரியாக வேடமணிந்த ஒருவர் வழிநெடுகிலும் உடன் சென்றுள்ளார். அதிர்ச்சியூட்டும் வகையில், போலி போலீஸ் சீருடை, ஐபிஎஸ் பேட்ஜுடன் அவர் சுற்றித் திரிந்தபோது அவரது தகுதிச் சான்றுகளை யாரும் சந்தேகிக்கவில்லை.

விநோதமாக சில போலீஸ் கான்ஸ்டபிள்கள் பவன் கல்யானுடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டனர். பின்னர், இந்த புகைப்படங்கள் காவல் துறையின் கவனத்தை ஈர்த்தபோது, ​​அந்த நபர் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்றும், அவர் ஒரு சாதாரண போலீஸ்கூட இல்லை என்றும் தெரிய வந்தது. அவர் போலி சீருடை, ஐபிஎஸ் பேட்ஜுடன் வந்து கல்யாண் அருகில் மகிழ்ச்சியுடன் நடந்து சென்றார்.

இது துணை முதல்வர் நெறிமுறையின் முக்கிய பாதுகாப்பு குறைபாடு. இந்தத் தகவல் வைரலானதை அடுத்து, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் அனிதா உத்தரவிட்டுள்ளார்.

போலி போலீஸ் சீருடை அணிந்து ஐ.பி.எஸ் அதிகாரி போல் காட்சியளித்த அந்த நபரின் பெயர் பிரகாஷ் ராவ் என்பது முதன்மையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பார்வதிபுரம் மாவட்டம், ஆந்திரா- ஒடிசாவின் எல்லையாக இருப்பதால் மிகவும் சென்சிட்டிவான பகுதி. இவ்வளவு சென்சிட்டிவ் ஏரியாவில் பவன் கல்யான் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது, ​​இவ்வளவு பெரிய பாதுகாப்பு அசம்பாவிதம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இச்சம்பவத்தால் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: ரூ.500 முதலீடு... இன்று 16.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு... இதுதான் திருபாய் அம்பானியின் கதை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share