×
 

பட்டப்பகலில் ரூ.22 லட்சம் அபேஸ்.. கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ்காரரின் தம்பி.. 4 பேர் கைது, ஒருவர் தலைமறைவு.!

சிதம்பரம் அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பட்டப்பகலில் 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொள்ளை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளன

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை சாவடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரும் நீண்டகால நண்பர்கள். இவர்கள் இருவருமே நகைகள் வாங்கி விற்கும் தொழிலில் நீண்ட காலமாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் குமாரிடமிருந்து சண்முகவேல் 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக பெற்றுள்ளார். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக சண்முகவேல் தனது தந்தையார் பெயரில் இருந்த 23 சென்ட் இடத்தை குமாருக்கு கடனுக்கு பதிலாக எழுதி கொடுத்துள்ளார். சிறுது காலத்துக்கு பின்னர், தான் திரும்ப பணத்தை கொடுத்து, இடத்தை கேட்கும் போது தர வேண்டும் என்றும் குமாரிடம் தெரிவித்தார். 

இதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு சண்முகவேல் தான் வாங்கிய கடனுக்கு பதிலாக எழுதி கொடுத்த இடத்தை மீட்பதற்காக 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை தயார் செய்து கொண்டு குமாரிடம் சென்றுள்ளார். தான் எழுதிக் கொடுத்த இடத்தை  வேறொரு பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தரும்படி  கூறினார். அதன்படியே குமாரும் தான் கடனுக்காக பெற்ற இடத்தை சண்முகவேல் கூறிய நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து பணத்தையும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் அந்த பகுதிக்குள் திடீரென வந்த 20க்கும் மேற்பட்டோர் குமார் மற்றும் அவருடன் இருந்தவர்களை தாக்கி விட்டு 22 லட்சத்து 25000 பணம் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு தப்பினர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஸ்ரீமுஷ்ணம் கடை தெருவில் ஓடி மறைந்தனர். 

இதையும் படிங்க: ஒரே இரவில் 14 கடைகளை உடைத்து திருட்டு..! கொள்ளையர்கள் அதிர்ச்சி.. வியாபாரிகள் மகிழ்ச்சி.. சுவாரஸ்ய தகவல்கள்..!

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், பணத்தை பிடுங்கி கொண்டு ஓடியவர்களை கண்டுபிடித்து தனது பணத்தை மீட்டு தருமாறு ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், அதில் அசோக் குமார், வெங்கடேசன், ஆனந்தன், பிரபாகரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதில் வெங்கடேசனின் சகோதரி ஸ்ரீமுஷ்ணம்காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிவது தெரிந்தது. மேலும் வெங்கடேசன் மீது சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு சிலர் பயத்தின் காரணமாக இவர் மீது புகார் கொடுக்க முன் வரவில்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சண்முகவேல் பணத்தை கொடுத்து இடத்தை மீட்ட பிறகு குமாரிடம் கொடுத்த பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டது தெரிந்தது. இதனை அவர்கள் வாக்குமூலமாக அளித்தனர். மேலும் இதில் முதல் குற்றவாளியாக உள்ள 23 லட்சத்து 25 ஆயிரம் பணத்துடன் ஓடிய சண்முகவேல் தலைமறைவானதால் போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணத்தில் பட்டப் பகலில் கடைத்தெருவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் அதிர வைத்த கொள்ளையர்கள்.. 20 நிமிடங்களில் ரூ.25 கோடி நகைகள் கொள்ளை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share